தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் தேவகோட்டை பேருந்து நிலையம், சிவன் கோயில் பகுதி, சருகணி விலக்கு, வெளிமுத்தி விலக்கு பகுதியில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


