• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம்

policeseithitv by policeseithitv
April 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரோனா கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
நாட்டில் சமீப நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனால், அவற்றை கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய மந்திரி ஹர்சவர்தன், நாட்டில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 1,19,13,292 பேர் குணமடைந்து உள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் குணமடைந்தோர் விகிதம் 96-97% அளவுக்கு உயர்ந்தது.
ஆனால், இந்த விகிதம் 91.22% ஆக சரிவடைந்து உள்ளது.  எனினும், கடந்த 7 நாட்களாக 149 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என கூறியுள்ளார்.
கடந்த 14 நாட்களாக 8 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 3 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.  கடந்த 28 நாட்களாக 63 மாவட்டங்களில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.
சுகாதார பணியாளர்களில் 89 லட்சம் பேர் முதல் டோசும், 54 லட்சம் பேர் 2வது டோசும் பெற்றுள்ளனர்.  முன்கள பணியாளர்களில் 98 லட்சம் பேர் முதல் டோசும், 45 லட்சம் பேர் 2வது டோசும் பெற்றுள்ளனர்.
இதேபோன்று, 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களில் 2.62 கோடி பேர் முதல் டோசும், 5 லட்சத்து 23 ஆயிரத்து 268 பேர் 2வது டோசும் பெற்று உள்ளனர்.  60 வயதுக்கு மேற்பட்டோரில் 3.75 கோடி பேர் முதல் டோசும், 13 லட்சம் பேர் 2வது டோசும் பெற்று உள்ளனர்.
இதுவரை 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.  அவற்றில் 1.05 கோடி தடுப்பூசி டோஸ்கள் 44 நாடுகளுக்கு மானிய அடிப்படையிலும், 3.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் 25 நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையிலும் மற்றும் 1.82 கோடி தடுப்பூசி டோஸ்கள் 39 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் வசதியின் அடிப்படையிலும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.
Previous Post

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க முடியாது – தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

Next Post

விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் – சென்னை மாநகராட்சி

Next Post
விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் – சென்னை மாநகராட்சி

விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் - சென்னை மாநகராட்சி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In