சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குட ஆதரித்து நேற்று தேவகோட்டை அண்ணா ஆர்ச் அருகில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதற்கு முன் இரு சக்கர வாகன பேரணியை கார்த்திக் சிதம்பரம் எம்.பி தொடங்கி வைத்தார் நகர் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர் பின் பொது கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில் அதிமுக அரசு 10 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் எடுத்து முடிக்கவில்லை, அதிமுக ஆட்சிக்கு மாற்று ஆட்சியாக திமுக ஆட்சி மட்டுமே அமையும், பிஜேபி வேட்பாளர் H.ராஜா வெற்றி பெற்றால் என்னென்ன பேசுவார் என்று உங்களுக்கு தெரியும், பாரதியஜனதா கட்சி நம் மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவைக்கு பகையான கட்சி, தமிழ் மொழிக்கு பகையான மொழி ஹிந்தி மொழி என பேசினார். பின்னர் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் பேசுகையில் ஜனநாயக நாடு விரைவில் சர்வாதிகாரிநாடாக இந்தியா மாறிவிடும், பாஜக வாசம் வாடை பாஜக நிழல் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை, பாஜக வேட்பாளர் 25 வருடமாக நிற்கிறார் அவர்களை நீங்கள் புறக்கணித்துவிட்டு வருகிறீர்கள் அதேபோல் இந்த முறையும் புறக்கணிக்க வேண்டும், இந்த தொகுதியில் பிக்பாஸ் கட்சி சார்பாக ஒரு வேட்பாளர் போட்டிருக்கிறார் பிக்பாஸ் பிடித்தால் பாருங்கள் அந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது நோட்டாவிற்கு போடுவதற்கு சமம்,குக்கர்ல சமையல் பண்ணலாம் குக்கருக்கு ஓட்டலாம் போடமுடியாது பங்காளி சண்டைக்காக நிற்கும் கட்சி அமமுக கட்சி, பிக்பாஸ், குக்கர்,நாம் தமிழர் ஆகிய கட்சி சூப்பர் நோட்டா கட்சியாகும், கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


