தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 6பேரை போலீசார் கைது செய்து, 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய 3 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 6பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழக்கு்ப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

