சாத்தான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்டவர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
கடந்த 02.03.2021 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ அம்பலசேரி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கணேசன்(45) என்பவரை கீழ அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி (எ) இளங்காமணி மகன் ராமர் (25) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரியான ராமர் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் எதிரி ராமரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மேற்படி எதிரி கீழ அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி (எ) இளங்காமணி மகன் ராமர் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் எதிரி ராமரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.

