ஆழ்வார்திருநகரி பஜார் வீதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி வேட்பாளர் ஊர்வசி அமிர்த ராஜை ஆதரித்து திமுக மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஆழ்வார்திருநகரியில் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் ஏரல் காந்தி சிலை அருகில் அவர் பேசுகையில், தமிழகத்தில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளுக்கு ஆளுங்கட்சி தடையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கரோனாவில் காரணம் காட்டி மக்கள் நலப் பணிகளுக்காக நிதிகளை நிறுத்தி வைத்திருந்தார். தற்போது மக்கள் நல பணிகளை செய்ய விடாமல் தடுத்த இரண்டு பேரும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெறும்போது திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருப்பார். அப்போது நானும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அனைவரும் இணைந்து மக்கள் நல பணிகளை தங்குதடையின்றி செய்வோம். தற்போதைய ஆட்சி வேலை வாய்ப்பு கிடையாது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு புதிய சட்டங்கள் மூலம் பறித்துக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சியினர் எதிர்த்த வேளாண் சட்டங்களையும் குடியுரிமை சட்டங்களையும் தன்னையும் அமைச்சர்களின் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார்.
தற்போது தேர்தலுக்காக அந்த சட்டங்களை ரத்து செய்ய பாடுபடுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் பிரிவினை சக்திகளை வெறுப்பு அரசியல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கலைஞர் ஆட்சியில் தமிழகத்திற்கும் முதலீடுகள் வருவதில் மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது எடப்பாடி ஆட்சியில் 14வது இடத்தில் உள்ளது. அதிமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழகம் மீட்கப்பட வேண்டும் அடுத்து வரும் தேர்தல் மூலம் இந்தியா அமைக்கப்பட வேண்டும். பெண்கள் சுய உதவிகுழுகள் பேல ஆண்கள் சுய உதவி குழு அமைக்கப்படும் என்றார்
மேலும், அதிமுக அரசு வழங்கிய இலவச பொருட்களான மிக்சி, பேன், கிரைண்டர் உங்கள் வீட்டில் உள்ளதா? அது சரியான முறையில் இயங்குகிறதா? என மக்களிடம் கேட்டால் மக்கள் அது ஒன்றுமே இயங்கவில்லை. பழைய காயலான் கடையில் வாங்குகிறார்கள் என்கிறார்கள். ஆனால், திமுக ஆட்சியில் கலைஞர் கொடுத்த டிவி நல்லமுறையில் இயங்குகிறதா? என்றால் மக்கள் இன்றும் நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள் என்றார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் எஸ்.பார்த்தீபன், நகர திமுக செயலாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்ட ராமன், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலாளர் திருவள்ளுவன், ஒன்றிய செயலாளர் பூலான் பாண்டியன், நகர செயலாளர் மாணிக்கம்,ஆதித்தமிழர்பேரவை, வலது,இடதுகம்யூனிஸ்ட் நிர்வாகி கள் பொதுமக்கள்திரளாக கலந்து கொண்டனர்.

