விளாத்திகுளம் உட்கோட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் இடங்களுக்கு விளாத்திகுளம் தொகுதியில் 29 உதவிஆய்வாளர்கள் மொபைல் பார்ட்டியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் 29 மொபைல் பார்ட்டி உதவி ஆய்வாளர்கள் மற்றும் மொபைல் பார்ட்டி மேற்பார்வையாளர் விளாத்திகுளம் அனைத்துமகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீரல்பானு ஆகியோர்களுக்கு தேர்தல் நடைபெறும் சமயத்தில் வாக்குப் பெட்டி எடுப்பது முதல் வாக்கு பெட்டியினை ஒப்படைக்கும் வரை செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றியும் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மேலும் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் நடத்திய இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீரல்பானு மற்றும் 29 மொபைல் பார்ட்டி உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

