சென்னையிலிருந்து ஆரணிக்கு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் என்ற பகுதியில் துணை ராணுவத்தினர் 15க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நான்கு வழிப் பாதையை ஆறு வழி பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக கனரக இயந்திரங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனஇந்நிலையில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து, ஓட்டுநர் கவனக்குறைவால் கனரக இயந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். விபத்துக்குறித்து அப்பகுதி மக்கள் 108க்கு தகவல் தெரிவித்தனர்.ராணுவ வீரர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்


