\n\n
  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் தொடரும் கொலைகள்! குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!

policeseithitv by policeseithitv
October 31, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் தொடரும் கொலைகள்! குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, அக். 31

தென் மாவட்டமான தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக முதல்வர் நேரடியாகக் களமிறங்க வேண்டும் என்று நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான ஆர். அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் மாவட்டமான தூத்துக்குடியில் அடுத்தடுத்து தொடர் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது ஏன்? தூத்துக்குடி கொலை நகரமாக மாறுவது ஏன்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. தொடர் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடூரமான கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாத வகையில், சட்டத்துக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான அச்சம் ஏற்படும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும்.
குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் முக்கியக் கடமையாகும். இனியும் தமிழக அரசு கொலைக் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தமிழகம் ரத்த பூமியாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வர் நேரடியாகக் களமிறங்கி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஆர். அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64 வது குருபூஜை விழா : தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் சட்டப் போராளி சங்கிலி தலைமையில் 100 க்கு மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், சென்று தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In