\n\n
  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64 வது குருபூஜை விழா : தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் சட்டப் போராளி சங்கிலி தலைமையில் 100 க்கு மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், சென்று தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
October 31, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64 வது குருபூஜை விழா : தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் சட்டப் போராளி சங்கிலி தலைமையில் 100 க்கு மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், சென்று தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கமுதி, அக், 31

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று (அக்.30) நடைபெற்ற தையொட்டி மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் திருவுருவச்சிலைக்கும்,
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் சட்டப் போராளி டாக்டர் எம். சங்கிலி அவர்கள் தலைமையில் தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சென்று தேவர் திருமகனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் காமேஸ்வரன் அவர்கள் தலைமையில் 10 க்கு மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் தொண்டர்கள் வருகை தந்து தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் சட்டப் போராளி டாக்டர் எம். சங்கிலி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போற்றி , ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார் அதன் பின்னர் நிறுவனத் தலைவர் உடன் வாகன அணிவகுப்போடு சென்று தேவர் திருமகனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் சங்கிலி அவர்கள் தேவர் திருமகனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது.
கோரிப்பாளையம் பாலம் குறித்த கண்டனம்: மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த திமுக அரசுக்கு, தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் சார்பாகக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் தேவர் சிலையை அவமதிக்கும் வகையில் அமைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய டாக்டர் சங்கிலி, இதன் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு தோல்வியை சந்தித்தது என்றும் எச்சரித்தார்., தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் சங்கிலி அவர்களின் தலைமையே கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி வலு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், கிளை,ஒன்றியம் மாநகரம், மாவட்டம் மண்டலம் மாநிலம் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்து மிக ஆளுமை மிக்க ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவிற்கு தமிழகமெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் நிர்வாகிகள் வருகை தந்து நிறுவனத் தலைவர் சங்கிலி தலைமையில் தேவர் திருமகனாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர், மாநில பொருளாளர் ஆர்.கே.ஆனந்தன், M.மருதுஜிதேவர் மாவட்ட பொதுச் செயலாளர் மதுரை புறநகர் எம்எம்பாரத் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்ஆர்ரவிக்குமார்ஜி திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பிசேதுராமன் மாநில இளைஞரணி செயலாளர் கூடல்குணா அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் உசிலைவிக்கி தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் தர்மர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் உசிலை செல்வன் வீரபாண்டியன் மாநில மாணவரணி செயலாளர் வதிலை ஸ்டாலின் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் கரூர் மாவட்ட பொதுச்செயலாளராக கே காமேஸ்வரன், கரூர் மாநகர் மாவட்ட செயலாளராக எம் ராஜ்குமார், உசிலை ஒன்றிய செயலாளர் எஸ்தெய்வம் தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் நவீன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு கரூர் காமேஷ்

Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: கொடைக்கானலில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் கோடை வி ஆனந்த் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மெகா அன்னதானம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In