• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம், 50 ஆண்டுகளாக பின்தங்கியுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே எனது லட்சியம் : நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வீடு தோறும் மக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரம்!” திராவிட கட்சிகள் கலக்கம்

policeseithitv by policeseithitv
April 17, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம், 50 ஆண்டுகளாக பின்தங்கியுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே எனது லட்சியம் : நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வீடு தோறும் மக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரம்!” திராவிட கட்சிகள் கலக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓட்டப்பிடாரம், ஏப்ரல், 17

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ள நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு மைக்’ (Mike) சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் (NMEK) கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தீவிரமாகப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஓட்டுக்கு பணம் கிடையாது.. இலவசமாக எதுவும் கொடுக்க மாட்டேன்..
ஆனால் இலவசமாக தரமான கல்வி, தார் சாலைகள், சிறப்பான மருத்துவம், வளமான விவசாயம், அனைவருக்கும் வீடுகள், தடையின்றி மின்சாரம் போன்றவற்றை கொடுப்பேன் என திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இலவசங்களை அறிவிக்காமல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே செய்து தருவதாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள கிராம மக்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்து மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என உரிமையுடன் கூறி வருகிறார். இதனால் தொகுதி மக்கள் தற்போது சிந்தித்து வருகின்றனர் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மாறி மாறி வாக்களித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓட்டப்பிடாரம் தொகுதி பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அதனால் ஒரு மாற்றம் வேண்டும் எனவும் மக்கள் பிரதிநிதியாக இல்லாமல் கூட மக்கள் பிரச்சனைக்காக வழக்கறிஞர் என்ற அடிப்படையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. நைனாபுரம்,
வேலாயுதபுரம், சாமிநத்தம், நடுவக்குறிச்சி, இந்திராநகர்,
முப்பிலிவெட்டி ஆகிய பகுதிகளுக்கு
சென்று மைக் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறசெய்ய வேண்டும் என தீவிரமாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் போன்ற பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியும் வாக்குசேகரித்தார்.கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றுவேன்.எனவே
இந்த ஒருமுறை உங்களுக்காக உழைப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என பேசினார்.
பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் இவருக்கு மாலை
அணிவித்தும், ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுச் சின்னங்களை ஒதுக்கி உள்ளதில் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்களுக்கு ‘மைக்’ (Mike) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) இவரது பெயர் மற்றும் சின்னம் வரிசை எண்: 3-ல் இடம்பெற்றுள்ளது.
“மக்களின் குறைகளை உரக்கச் சொல்லவும், தொகுதியின் மாற்றத்திற்காகவும் இந்த மைக் சின்னம் சட்ட சட்டசபையியில் ஒலிக்கும்” என அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது உற்சாகமாகத் தெரிவித்து வருகின்றனர். இந்த தீவிர தேர்தல் பிரச்சாரத்தின் போது
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்,
நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள், உட்பட ஏராளமானோர். கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று தீவிர தேர்தல் களத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திராவிட கட்சிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றன.

Previous Post

தூத்துக்குடி அரசியலில் திடீர் பரபரப்பு தவெக-விலிருந்து 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In