தூத்துக்குடி.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர்கள் சகாயராஜ், பெருமாள்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதிமுக மாநக செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமதுஅசன், மூக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, திராவிடர் கழக தலைவர் முனியசாமி, சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமய்யம் மாவட்டச்செயலாளர் ஜவஹர், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டு காலமாக செய்த திட்டங்களால், தமிழகத்தை எல்லா துறைகளிலும் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக கொண்டு வந்துள்ளார். அடிப்படை, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். தூத்துக்குடியில் ரூ.800 கோடி அளவுக்கு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி தந்து உள்ளோம். தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும். அதற்கு நீங்கள் செய்யும் உதவியாக, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பெண்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கிப்ட் வவுச்சர், முதல்வர் படிப்பகங்கள் உள்ளிட்டவை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன. நமது தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறது. எதிர்க்கட்சியில் காணாமல் போனவர்களை எல்லாம் தற்போது தேடி பிடித்து வேட்பாளர்களாக அறிவித்து உள்ளார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர் செல்லப்பாண்டியன் மழை வெள்ளம் காலத்தில் எல்லாம் காணாமல் போனவர் பட்டியலில் இருந்தவர். அவரை தேடிப்பிடித்து கொண்டு வந்து இங்கு வேட்பாளராக நிறுத்தி உள்ளார் எடப்பாடி. அவருக்கு தூத்துக்குடி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் பற்றிய எதுவும் தெரியாது.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்து உள்ளது. தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும். தி.மு.க செயல்வீரர்களை நம்பித்தான் இந்த 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். அதை தொகுதி கூட்டத்திலும் தெரிவிக்கச் சொன்னார். அதன்படி செயல்வீரர்களாக இருக்கின்ற நீங்கள் தான் தங்களது பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து 20 நாட்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். எல்லா அரசு திட்டங்களையும் மீண்டும் பெற்றுத் தருவோம் என்றும் கூற வேண்டும். கோவில்பட்டிக்கு பிரச்சாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தவறான ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். இது ஏற்கனவே துறை ரீதியான விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியில் நடைபெற்றதை போல் அவர் கூறுவதற்கு இந்த விளக்கம். 2012 முதல் 2026 வரை சுமார் 6000 போக்சோ வழக்குகள் பதிவானதில் நீதிமன்றத்தின் உத்திரவுபடி இழப்பீடு தொகையாக ரூ.200 கோடி கொடுத்துள்ளோம். 2012 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களும் அடங்கும். இதை தவறாக எடப்பாடி பழனிச்சாமி திரித்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜவுளி, சூரிய ஒளி ஏற்றுமதியில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடியில் புதிதாக இரயில்வே மேம்பாலங்கள் அமைத்து தருவோம். தூத்துக்குடி தொகுதியில் துறைமுகம், மதுரை ரோடு, நெல்லை ரோடுடன் மாநகரை இணைக்கும் வகையில் பல்வேறு புதிய இணைப்பு சாலைகள் ஏற்படுத்தி தருவோம். மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும் 15, 16, 17, 18 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த திட்டமும் விரைந்து செயல்படுத்தப்படும். தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளத்தில் சிப்காட் வளாகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சிறப்பு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆகையால் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார்.
கூட்டத்தில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், குபேர்இளம்பரிதி, முத்துராமன் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், நிக்கோலாஸ் மணி, பெனில்டஸ், கோகுல்நாத், அருண்குமார், ராமர், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபஸ்அமிர்தராஜ், ஆனந்தசேகர், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பரமசிவம், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், சாகுல்ஹமீது, ரவி, செல்வின், சங்கரநாராயணன், முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், ராஜ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சுரேஷ், செல்வராஜ், மந்திரகுமார், பொன்பெருமாள், டென்சிங், மனோ, பாலகுருசாமி, சுரேஷ், பாலு, அல்பட், ரவி இளங்கோ, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமார், பத்மாவதி, கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், கண்ணன், வைதேகி, பவாணி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, ராஜதுரை, ஜான்சிராணி, பட்சிராஜ், ஜான், முத்துமாரி, வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர்கள் முத்து, தனலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், குமார், சுரேஷ்குமார், மற்றும் மணி அல்பட், பிரபாகர், பேச்சிமுத்து, பாஸ்கர், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த திராளானோர் பலர் கலந்து கொண்டனர்.

