தூத்துக்குடி,மார்ச், 27
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் கடும் எச்சரிக்கை
விடுத்தனர். தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில்
குடிபோதையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டி, அடுத்தடுத்து வாகனங்களை இடித்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை,
எடுக்க வேண்டும் எனவும் சாலைகளில் ஓரமாக செல்லும் அப்பாவிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவார்கள் மூலம் ஏற்படும் விபத்துகளால் பல அப்பாவி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை இயக்குனர் தெரிவித்த உத்தரவு பேரில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது போலீசார்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர கனரக வாகனம் ஓட்டுபவர்கள் மது அருந்தி கொண்டு வாகனம் ஓட்டி செல்கிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்தி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மூலம் பல அப்பாவி உயிர்கள் பறிபோகி விடும் எனவும் ஆகையால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 10,000 அபராதம், மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை (பிஎன்எஸ் பிரிவு 105(2)) விதிக்கப்படும் எனவும் முதல் முறை குற்றத்திற்கு ₹10,000 வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படலாம், மேலும் அபராதம் செலுத்தாத வாகனங்கள் ஏலம் விடப்படும். எனவும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் இதனால் தற்போது தூத்துக்குடியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட எஸ்பி மதன் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் காவல் ஆய்வாளர் வில்லியம் போக்குவரத்து பிரிவு காவலர்கள் முழு ஒத்துழைப்போடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதுபோல் பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் பகுதிகளில் காலையிலும் பள்ளி முடிந்து செல்லும் மாலை நேரத்திலும் மாணவர்களுக்கு எந்த வித போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடாது என காவல் ஆய்வாளர் வில்லியம் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த நிகழ்வு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது போக்குவரத்து காவலர்களிடம் அன்போடு வேலை வாங்கி வருகிறார் இதனால் போக்குவரத்து போலீசார்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மூலம் பொதுமக்கள் உயிருக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என தனிக் கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மதுரை பைபாஸ் ரோடு, துறைமுகம் பகுதி, முத்தையாபுரம் விளக்கு ஆகிய வழிகளில் வரும் கனரக வாகனங்கள் லாரிகள் ஆகியவற்றை சோதனை செய்து டிரைவர்கள் குடிபோதையில் உள்ளார்களா என சோதனை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தூத்துக்குடி நகரின் மையப்பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுபவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்து வருவதால்
தற்போது குடிபோதையில் இரு சக்கரத்தில் உலாவரும் நபர்களும் எண்ணிக்கை வெகு விரைவாக குறைந்துள்ளது. அதுபோல் கனரக வாகனம் ஓட்டி வரும் டிரைவர்கள் குடிபோதையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து காவல் துறையில் துணிச்சலுடன் எந்தவித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு அதிகாரி கிடைத்துள்ளார் என காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமி னை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். இவரது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் தூத்துக்குடி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர் காரணம் இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஹாரன் மற்றும் மூன்று நபர்கள் அமர்ந்து கொண்டு ரேஸ் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் நிகழ்வுகளால் தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி உற்று வந்தனர் தற்போது போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் காலையிலிருந்து இரவு வரை ஓய்வில்லாமல் முழுமையான ரோந்து பணிகள் ஈடுபட்டு வருவதோடு விதிமுறைகள் மீறி செயல்படும் வாகனங்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுப்பதால் வாகன ஓட்டிகள் தற்போது தங்களது நிலையை மாற்றி வருகின்றனர். ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் அதிரடி நடவடிக்கைகளை தூத்துக்குடி பொதுமக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர், பாராட்டி வருகின்றனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் எந்தவித பாரபட்சமும் இன்றி அதிரடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் ஐபிஎஸ், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் ஆக இருவருக்கும் காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் ஆகியோருக்கு பொது மக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் அதிரடி நடவடிக்கைக்கு காலை தீபம் நாளிதழ் குழுமம் சார்பில் ராயல் சல்யூட்….
பாக்ஸ் நியூஸ்
==============
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் 23.03.26 ம்தேதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வந்த கனரக வாகனத்தை சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மது போதையில் இருப்பது மூச்சு பரிசோதனை கருவி மூலம் கண்டறியப்பட்டது.
மேற்படி நபர் மீது குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மேற்படி குடிபோதை ஓட்டுநரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். அதுபோல்
துறைமுக சாலை திருச்செந்தூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் 25.03.26 ம்தேதி மாலை வாகன சோதனை நடத்தினர்.அப்போது வந்த டேங்கர் வகை கனரக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த உழக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மது போதையில் இருப்பது மூச்சு பரிசோதனை கருவி மூலம் கண்டறியப்பட்டது.
மேற்படி நபர் மீது குடிபோதை மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் (Rash Driving) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றம் மூலம் சுமார் 15000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மேற்படி ஓட்டுநரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். நாள்தோறும் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் தூத்துக்குடிக்குள் மது போதையில் வாகனம் ஒட்டி வரும் டிரைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
