வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் 4 தினங்கள் மட்டுமே நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது வாக்குகளை உறுதிப்படுத்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் : ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா பொது மக்களுக்கு வேண்டுகோள்!!!
தூத்துக்குடி, டிச, 27

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கி கடந்த 14 ஆம் தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27 ஆம் தேதி (இன்று), 28 ஆம் தேதி ( நாளை ) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம் முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம் இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஒன்றிய/பகுதி/கிளை செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் BLA2 , பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்,BDA , கட்சி முன்னோடிகள் அந்தந்த வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து விடுபட்ட, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பொதுமக்கள் அனைவருக்கும் இந்த 4 தினம் கிடைக்கும் அரிய வாய்ப்பு பயன்படுத்தி தமது வாக்குகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

