நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுற்று வட்டார கிராமத்திலுள்ள 3 ஆயிரம் பேருக்கு நேற்று கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி சுற்று வட்டார கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்து விருந்து வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு கிறிதுஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
