தூத்துக்குடி,
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம் அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள், ஆகிய நிர்வாகிகள் என தொண்டர்கள் வரை சந்தித்து வாழ்த்து பெற்று கொள்வார். அதேபோல் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் முகாம் அலுவலகத்தில் அதேபோல் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.
இது தமிழக கலாச்சாரத்தின் ஒரு நட்பாகும். இதை பின்பற்றி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா தனது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளம் மீனவர் நலன், மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் 2026ல் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் கூறியுள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் தாங்கள் பணியாற்றும் வடக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் திமுகவிற்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து பணியாற்றுங்கள் என்று மனதார வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.

