மதுரையில் மின்சார சேமிப்பு சிக்கன வாரத்தின் கடைசி நாளான இன்று (டிச.20) மாலை மக்களிடையே மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளக்குத்தூண் பகுதியில் இருந்து தெற்கு மாசி வீதி வழியாக டி.எம். கோர்ட் வரை ஊர்வலமாக மின்சார வாரிய பணியாளர்கள் வந்தனர். ஊர்வலத்தை தலைமை பொறியாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இதில் மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி,செயற் பொறியாளர் (பொது) பால பரமேஸ்வரி, உள்ளிட்ட 40 உதவி பொறியாளர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி செயற்பொறியாளர் விஜயன் செய்திருந்தார்.
சு. இரத்தினவேல்.
நிருபர். மதுரை.

