ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி, டிச, 12

சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது: வாக்குச்சாவடியை வென்றால் சட்டமன்ற தொகுதியை வெல்லலாம். அதற்காக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரசாரம் தொடங்கப்படுகிறது. அவரவர் வீடு அருகே உள்ள வாக்குச்சாவடியில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி, பூத் எண் 42 – மேளமடம் பகுதியில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” எனும் மக்கள்சந்திப்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்புக்கான திட்டங்கள், முகவர் பொறுப்புகள், மக்களிடம் சேர வேண்டிய தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இதன் போது, வீடு வீடாகச் சென்று அரசின் நலத்திட்டங்கள், சமூக நலப் பயன்பாடுகள், பெண்கள் – இளைஞர்கள் – மாணவர்களுக்கான அரசு செயல்பாடுகள் போன்றவை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெளிவுபடுத்தி, மீண்டும் திமுகவிற்கு முழு ஆதரவை உறுதிசெய்யும் பொருட்டு பிரச்சாரம் துவங்கியது. பூத் வாரியாக வாக்காளர்கள் கணக்கெடுப்பு, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அணுகல், புகார் – தேவைகள் நேரடியாக தலைமைக்கு கொண்டு சேர்க்கும் பூத் குழு செயல்முறைகள் குறித்து முகவர்களுக்கு வழிகாட்டப்பட்டது .நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை அமைப்புகள், பெண்கள் அணித் தலைவர்கள், இளைஞரணி, கழகத்தின் பல்வகை உறுபினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

