தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஜுலை 28 மாநகராட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்களின் குறைதீர்க்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா, முன்னிலை வகித்தார்.
பின்னர்் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கடந்த பல மாத காலமாக சுழற்சி முறையில் விடுமுறை நாட்களை தவிர்த்து புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக, பிறப்பு, இறப்பு, முகவரி மாற்றம், பெயர் மாற்றம் போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது மட்டுமின்றி புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பித்தால் அதற்கும் உடனடி ஆணை வழங்கப்படுகிறது.
இந்த மண்டலத்தில் இதுவரை 938 மனு பெறப்பட்டு அதில் 08 மனு மட்டும் தான் தீர்வு காணப்படாமல் உள்ளது மீதி 930 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 16 17 18 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது மழை காலத்தில் வேலை நடைபெறவில்லை தற்போது பணிகள் விரைவில் நடைபெற உள்ளது 100க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்படாமல் உள்ளது அந்தப் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது பக்கிள்ஓடை விரிவாக்கம் செய்யப்பட்டு தண்ணீர் சென்றதால் பாதிப்பு இல்லை பக்கிள் ஓடை பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக 7கிலோ மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை 16 வழித்தடங்கள் மூலம் கடலுக்கு மழைநீா் கடலுக்கு செல்கிறது. அதில் காற்றாற்று வெள்ளநீரும் அடக்கம் தமிழா் திருநாளான பொங்கள் திருநாளில் நம் ஊர் மக்கள் ராஜாஜி பூங்கா, ரோச்பூங்கா ஆகியவற்றை தான் பயன்படுத்தி வருகின்றன. அதுவும் தற்போது நடைப்பயிற்சி விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது திறந்தவெளியில் அதுபோல எம்ஜிஆர் பூங்காவிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது பெண்களுக்கான மகளிர் பூங்காவில் ஜிம் ஏற்கனவே உள்ளது. எந்த புகாராக இருந்தாலும் ஆன்லைனிலும் புகார் அளிக்கலாம் நேரிலும் கொடுக்கலாம் தற்போது புதியதாக போடப்படுகின்ற கால்வாய்கள் எல்லாம் மூடி போடப்படுகிறது அது எல்ேலாருக்கும் வசதியாக உள்ளது கொசு தொல்லை இருக்காது ஆனால் தற்போது சண்முகபுரம் 31 32 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் மூடியுடன் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தருவைகுளத்தில் 28 எம்டி கழிவுநீர் சென்று கொண்டுள்ளது வரும் காலத்தில் சுத்திகாிக்கப்பட்ட பல ஆலைகளுக்கு அந்த தண்ணீர் வழங்கப்பட உள்ளது குப்பைகளை பொதுமக்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும் தெப்பக்குளம் பிரச்சனை பற்றி எந்த ஒரு கவலையும் வேண்டாம் பொதுமக்கள் கோரிக்கையைடுத்து தான் பணிகள் சீரமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தது தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரில் மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்களின் கோரிக்கையைடுத்து அங்கு தேங்கி இருந்த நீரை அப்புறப்படுத்தப்பட்டது அதன் அடிப்படையில் மழை நீர் செல்லும் வகையில் இரண்டு பைப் லைன் போடப்பட்டிருந்தது. கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அந்த பைப்லைன் வழியாக காற்று உள்ளே சென்று தெப்பக்குளம் நடைபாதை பாதிக்கப்பட்டுள்ளது விரிசல் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் பழமை மாறாமல் அப்படியே சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி கூறினார்
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அன்னலெட்சுமி, நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, நகரமைப்பு சுகாதார அலுவலர் சரோஜா, உதவி செயற்பொறியாளர்கள் ராகவி, காளிதாஸ், இளநிலை பொறியாளர் லெலின், இளநிலை குழாய் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் கனகராஜ், கந்தசாமி, ஜான், விஜயலட்சுமி, பொன்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதிசெயலாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், போல்பேட்டை பகுதி திமுக பிரதநிதி பிரபாகர், வட்டப்பிரதிநிதி துரை, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

