தூத்துக்குடி
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 24-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு உரையாடல் நடைபெற்றது. அப்போது அந்த வார்டுக்கு அடிப்படை வசதிகள் என்ன தேவை என்ன செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்து
மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டம் இரண்டு தினங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் விடுபட்ட மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது இரண்டு கப்பல் கட்டுதளம் தூத்துக்குடியில் வருகிறது ஒன்று அரசு சார்பிலும் மற்றொன்று தனியார் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது அதன் சார்பில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் மீண்டும் தமிழக முதலமைச்சர் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். எத்தனை அணிகள் தமிழகத்தில் இருந்தாலும் நமது வாக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 20 நாட்கள் இந்த பணியை நாம் செய்ய வேண்டும் மக்களைநேரில் சென்று சந்திக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி முன்பு எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது தெருவிளக்கு. சாலை வசதி. பூங்கா. பார்க் வசதிகள் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்துள்ளோம் இன்னும் என்னென்ன வசதிகள் செய்ய உள்ளோம் குறைகளை உடனடியாக சரி செய்யப்படும். எஸ் ஐ ஆர் பட்டியல் உங்களிடம் உள்ளது அதன் அடிப்படையில் வீட்டுக்கு வீடு மக்களை நாம் சந்திக்க வேண்டும் அண்ணா நகர் டி எம் பி காலனி சண்முகபுரம் மட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பழைய கான்கள் உடைந்து உள்ளது புதியதாக காண்கள் கட்டப்பட்டு மூடி அமைக்கப்பட்டு நல்ல முறையில் அமைக்கப்பட உள்ளது என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.
அந்த வார்டுக்குட்பட்ட பகுதி மக்களை வீடு வீடாக சென்று திமுக அரசு செய்த சாதனைகள் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் திமுகவிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக பொருளாளர் அனந்தையா, வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மற்றும் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

