டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் – ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தாா் !
தூத்துக்குடி, டிச, 6

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி பரும்பூா் கிராமத்தில் திமுக துணைச் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலன் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன். ஆகியோா் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான அ. இளையராஜா அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மலா்தூவி மாியாதை செய்தார். பின்னர் சமூகநீதியும் சமத்துவமும் கல்வி முன்னேற்றமும் என அம்பேத்கா் உருவாக்கிய கொள்கைகள் குறித்து திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் நிா்வாகிகள் நினைவு கூர்ந்தனா். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டு மாியாதை செய்தனா்..

