தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை போல்பேட்டை முகாம் அலுவலகம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினா் அலுவலகம் ஆகிய இடங்களில் ெதாகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான கோாிக்கை மனுக்களையும் அரசின் சாா்பில் வழங்கப்படும் பல்ேவறு நன்மைகளுக்கும் கோாிக்கை மனு வழங்குகின்றன. அதனை நேரடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு விரைந்து பணிகளை முடித்திடுமாறு பாிந்துரைத்து அதற்கான தீர்வு கிடைக்க பெற்றதும் மனுதாரா்களுக்கு தங்களது உதவியாளா்கள் மூலமும் நேரடியாகவும் தகவல்கள் தொிவிக்கப்படுகின்றன.
இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில் இனிகோ நகர் பகுதியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைக்க பெற்றதும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தீ விபத்தால் சேதம் அடைந்த வால்டர் இல்லத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறி அரசு சாா்ந்த உதவிகள் வழங்குவதற்கு வழிவகை இருப்பின் அதையும் ஏற்பாடு செய்து தருவதாகவும் வேறு உதவிகள் எதுவாக இருந்தாலும் உதவி செய்கிறேன். என்று உத்தரவாதம் அளித்து ஆறுதல் கூறினாா்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலா் ரெக்ஸ்லின், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட், உள்பட பலா் உடனிருந்தனா்.

