தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மற்றும் புதிய பாரத எழுத்தறித் திட்டம் 2022-2027 சார்பாக எழுத்தறிவை கொண்டாடுவோம் நிகழ்ச்சி தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் செயல்படுகின்ற பயிற்சி மையங்களில் பயில்கின்ற கற்போர்கள் மற்றும் தன் ஆர்வலர்கள் கலந்து கொண்டு 1) கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அரங்கம் 2) பாரம்பரிய உணவு அரங்கம் 3) கைவினைப் பொருள்கள் அரங்கம் ஆகிய மூன்று அரங்கங்கள் அவர்களாகவே மிக சிறப்பாக அமைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் பாராட்டு விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை உரை ஆற்றி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உதவி திட்ட அலுவலர் முனியசாமி திட்டத்தின் நோக்க உரையாற்றினார்.
சிறப்பு திட்ட பயிற்சி மையத்தில் பயில்கின்ற கற்போர்களும், அவர்களுக்கு கற்பிக்கின்ற தன்னார்வலர்களும் ஆடல் பாடல் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களை உற்சாகப்படுத்தி கொண்டனர். மக்கள் மகிழ்ச்சி கலைக்குழுவினர் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.
கோவில்பட்டி வட்டாரம் மற்றும் தூத்துக்குடி நகர் புற வட்டாரம் வட்டார கல்வி அலுவலர்கள் பத்மாவதி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்செந்தூர் ஆசிரியர் பயிற்சிநர் ஜெகதீஸ் பெருமாள் நன்றியுரையாற்றினார். ஆரோக்கிய ராசையா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
ஆசிரியர் ஹேனா, மாவட்ட அளவிலான தன்னார்வலர் சித்திரா ஆனந்தி, கருங்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு மூன்று வகையான அரங்குகளை, அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக வடிவமைத்தனர். 13 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்நிகழ்ச்சியில் காலையில் அரங்கங்களை அமைத்தல் முன்னேற்பாடுகளும் மதியம் பரிசளிப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கு விழாவும் நடைபெற்றது.

