தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!
===================
தூத்துக்குடி, நவ, 1
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாலும்,
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தன்மீது பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மூலம் குறுக்கு வழியில் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார்கள் என காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளரும் வழக்கறிஞர் எம் ஜி எம் ரமேஷ் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேட்டியளித்தார்.
தூத்துக்குடியில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிச் செயலாளர் ரமேஷ் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம் ஜி எம் ரமேஷ் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்
தூத்துக்குடி.
கடந்த 2022ம் ஜுன் மாதம் காரபேட்டை நாடார் மகமையில் நடைபெற்ற தேர்தலில் காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நீதிமன்ற உத்திரவுபடி 04.08.2022 முதல் செயலாளராக பொறுப்பில் உள்ளேன். கடந்த காலங்களில் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகளை களையும் வண்ணமாக பள்ளியில் பொறுப்பேற்றவுடன் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அளவு மிகவும் குறைந்து இருந்ததன் காரணமாகவும், குறிப்பாக 10 மற்றும் 12 வகுப்புகளில் சுமார் 70 சதவீத தேர்ச்சி மட்டுமே இருந்தது. இதனை சீர்செய்வதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்வேறு சிறப்பு வகுப்புகள் ஆகியவை நடைபெற்றது. தற்போது இப்பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்புகளில் 98 முதல் 99 வரை சதவீத தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துள்ளோம்.
அதே நேரத்தில் பள்ளியில் பல்வேறு பணிகளை குறிப்பாக தூய்மை பணிகள், மைதானம் சீரமைப்பு, பள்ளி வேதியல் லேப், கணினி லேப் சீரமைத்து பள்ளி மாணவர்களுக்கு ஏதுவாக செய்தோம். மேலும் சத்துணவில் அரசு வழங்கும் நிதியையும் தாண்டி நாள்தோறும் ரூ.1000 கூடுதலாக பல்வேறு ஊட்டசத்துக்கள் மிக்க உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடன் சில சுணங்கள் ஏற்பட்டது. அதுகுறித்து ஆராய்ந்த போது, ஆசிரியர்கள் சிலர் ஒருங்கிணைந்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து அதில் பணம் இழந்ததாகவும், அடிக்கடி போன் பயன்படுத்தி வருவதாகவும் ரியல் எஸ்டேட் தொழில் விசயமாக பேசுவது போன்ற மாணவர்களின் கல்வி பணிகளை தாண்டி ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதால், பள்ளிப் பாட வேலையில் மட்டும் ஆசிரியர்களின் செல்போன்களை தலைமையாசிரியர் அலுவலகத்தில் வைக்க கூறினேன். மேலும் ஆசிரியர்களின் வீடுகளில் இருந்து வரும் அவசர போன் கால்கள் தலைமையாசிரியர் மூலமாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்ற திட்டத்தை அமுல்படுத்தியிருந்தேன். பள்ளியில் மாணவர்கள் வருவதற்கு முன்பாக ஆசிரியர்கள் வரவேண்டும் என்பதற்காக பயோமேட்ரிக் முறையை அறிமுகப்படுத்தினேன். இதனால் சில ஆசிரியர்களுக்கு என்மேல் அதிருப்தி ஏற்பட்டது. கடந்த முறை நிர்வாகத்தில் இருந்தவர்கள் ஆசிரியர்கள் பணிநியமனம் வரும் பொழுது உனக்கு பணி பெற்றுத் தருவதாக கூறி முறைகேடுகள் மூலம் பணம் ஈட்டிய குற்றச்சாட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன். ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக என்மீது அதிருப்தியில் இருந்தார்கள். பள்ளி மாணவர்களின் பரிட்சை பேப்பரை ஆசிரியர்கள் திருத்தும் விதத்தை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் ஐஐடி என்றால் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்பது அனைவருக்கு தெரியும். ஆனால் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டிரான்ஸ்போர்ட் என்பதற்கு மார்க் அளித்துள்ளார்கள். 2 மார்க் கேள்விக்கு தவறாக விடை எழுதிய மாணவருக்கு 3 மார்க் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில் செயல்பட்ட ஆசிரியர்களின் ஊக்கதொகையை இடை நிறுத்தம் செய்தேன். மேலும் டெட் தேர்ச்சியில்லாத பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியரை இடைநிறுத்தம் செய்தேன். இவை அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே செய்தேன். இதனால் ஒரு சில ஆசிரியர்கள் என்மீது கொதிப்படைந்திருந்தனர். அதேசமயத்தில் எனது பணியினை பாராட்டி மகமையில் நல்ல பெயர் இருந்தது. இந்தவேளையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மகிமை நிர்வாகி விநாயகம்மூர்த்திக்கு மிகவும் வேண்டப்பட்டவர். மேலும் காரப்பேட்டை வடதிசை இந்து நாடார் மகிமை பதிவுத்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக எந்தவித அங்கீகாரமும் பதிவும் இல்லாமல் இன்றைய தேதி வரையில் இருப்பதை சுட்டிக்காட்டி பலமுறை கடிதம் கொடுத்து அதனை சரிசெய்ய தெரிவித்தேன்;. இதனால் சக நிர்வாகிகளுக்கும் எனக்கும் போட்டி பொறாமை இருந்து வந்தது. மேலும் இதுதொடர்பாக நான் முறையிட்டதன் பேரில் பல்வேறு வழக்குகள் இருந்தது. உறுப்பினர் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் பல்வேறு நீதிமன்றங்கள் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. விநாயகமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளில் எந்தவொரு புதிய உறுப்பினர்களை சட்டவிதிகளை பின்பற்றி சேர்க்கவில்லை. ஆகையினால் நான் இதுகுறித்து பல்வேறு நடவடிக்கை எடுக்க முறையிட்டேன்.
இந்நிலையில் கடந்த 2/8/22 எனது பதவி காலம் முடிந்த நிலையில் புதிதாக தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை அவர்களிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கும் வரை பழைய நிர்வாகிகள் செயல்படுவார்கள் என்பது விதி அதன் அடிப்படையில் நான் செயல்பட்டு வருகிறேன்.
மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாத காரணத்தினால் சிசிடிவி கேமராவை சரி செய்ய பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் ஆசிரியர்கள் தங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா மூலம் ஈடுபடுகிறார்கள் என கூறி பாஸ்வேர்டை மாற்றி ஏற்கனவே இருந்ததை அழித்து விட்டார்கள். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு சென்ற நான் ஆசிரியர்களுக்கும் நமக்கும் உள்ள பிரச்சினை நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் உள்ளது அதுவரை உங்களுக்கு பள்ளி செயலாளர் நான்தான் எனக் கூறினேன், ஆனால் ஆசிரியர்கள் வீண் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.
நான் இந்த பதவியில் நீடிக்க கூடாது என மகமை செயலாளர் விநாயகமூர்த்தி உதவி தலைவர் மகேந்திரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கல்வித்துறைக்கு முறைகேடாக கடிதங்கள் அளித்துள்ளனர்.
பள்ளியில் மாணவர்களின் நலனுக்காக தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன் முறைகேடாக எதையும் செய்யவில்லை. மேலும் காரப்பேட்டை நாடார் மகமையில் உள்ள பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி முறையாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்ததன் காரணமாக இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக தான் செயல்பட்டு வருவதால் என்னை குறுக்கு வழியில் அகற்ற ஆசிரியர்களை தூண்டிவிட்டு பள்ளியின் நலனுக்கு எதிராகவும் மாணவர்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்
இதனால் என்மீது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் உயர்நீதிமன்ற ஆணையர் மூலம் நடத்தப்பட்டதால் மட்டுமே பதிவு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதனை மறைத்து தேர்தலை நடத்த முயற்சிக்கின்றனர்.
அவசர கதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக என்னை மகமையில் இருந்து நீக்கியுள்ளனர். நீதிமன்ற மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எனது பொறுப்புகளை ஒப்படைக்க தயாராக உள்ளேன். அதுவரைக்கும் நான் சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் எனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலனிற்கும் மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
என பேட்டியின் போது வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும்
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர்
எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!
===================
தூத்துக்குடி, நவ, 1தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாலும்,