தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள், அலுவலர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளருமான ரெங்கசாமி தலைமையில் ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற்றது.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு 3வது வார்டுக்குட்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், அலுவலர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி பேசுகையில்: மாநகராட்சி பகுதியில் எல்லோரும் சுகாதாரமான முறையில் வாழ வேண்டும், என்பதற்காக பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பங்கு போற்றதக்கது. காரணம் கடந்த மழைவெள்ள காலத்தின் போது தேவையற்ற கழிவு பொருட்களை அகற்றியது மட்டுமின்றி பல உயிரிழப்பு ஏற்பட்டபோது அந்த இடத்திலும் நின்று பல்வேறு பணிகளை இந்த மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன் இனி வரும் காலங்களிலும் தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் உங்கள் வாழ்வு எல்லா வகையிலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

விழாவில் வட்ட செயலாளர் தெய்வேந்திரன், இளைஞரணி வேல்முருகன், டிடிசி முத்துராஜ், கேடிசிபால்ராஜ், செல்வராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் அவைத் தலைவர் ராஜசேகர், சுரேஷ் மக்புல் பாட்ஷா, நயினார், சுடலை, டி. பாலு, ஜவகர், ராஜாமணி, அண்ணாதுரை, சங்கர நயினார், சங்கர சுப்பிரமணியன், கே.டி.சி. சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

