தூத்துக்குடி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணையின்படியும், கலெக்டர் மற்றும் இணை இயக்குனர்கள் ஆலோசனையின்படியும், 2025ம் ஆண்டிற்கான செங்கல்பட்டு மாவட்ட அளவிலான வினாடி வினா மன்ற போட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கற்பகம் தலைமை மற்றும் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில் புக்கத்துறை தலைமை ஆசிரியர், செங்கல்பட்டு கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மதிப்பீட்டாளராகவும், வினாடி வினா நடுவர்களாகவும் செயல்பட்டடு, நடுநிலையான முடிவினை அளித்துள்ளார்கள். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பெருமக்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அலுவலர் பெருமக்களுக்கும் நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கிருபாகரன் மாவட்ட அளவிலான போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து, அனைவரையும ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்தினார்.. மேலும் பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களைக்குறித்தும், வெற்றி பெறும் மாணாக்கர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர் என்பது குறித்து விளக்கவுரையாற்றினர்.
அறிவியல் தொழில்நுட்பம் , தமிழ் , ஆங்கிலம் , கணிதம், அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல், திருக்குறள் , பொது அறிவு , தேன்சிட்டு மற்றும் தினசரி நாளிதழ் எனும் தலைப்புகளிலிருந்து , மூன்று வகையிலான பிரிவுகளில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 96 மாணாக்கர் 48 அணிகளாக பங்கு பெற்றனர். மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தம் முதல் மற்றும் இரண்டு இடங்களில் 2 அணிகள் (4 மாணாக்கர் ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச்சான்றும் , பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பயணப்படியும், நடுவர்களுக்கான மதிப்பூதியமும் போட்டி நாளன்றே முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.. அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றோர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

