அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 74 வது பிறந்த நாள் விழா : திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!”
தூத்துக்குடி செப், 19

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் 74 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது
. இதையொட்டி அவரது இல்லத்தில் அமைச்சரை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. இளையராஜா, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் இணைந்து அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடன் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் உடன் இருந்தனர். மேலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் பலரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

