தூத்துக்குடி
பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரோ யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்திறவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஓப்படைத்துக்கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி மொழியை படிக்க இணை ஆணையர் சரவணக்குமார், நகர்நல அலுவலர் சரோஜா, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழுத்தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், பாலசுப்பிரமணியன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

