தூத்துக்குடி
கரூரில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகப் பார்க்கப்படும் இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி அருகே 50 ஏக்கர் பரப்பளவில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில், திமுக சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தந்தை பெரியார் விருது: திமுக எம்.பி. கனிமொழிக்கும், அறிஞர் அண்ணா விருது: சுப.சீதாராமனுக்கும், கலைஞர் விருது: சோ.மா.ராமச்சந்திரனுக்கும், பேராசிரியர் விருது: ராமலிங்கத்துக்கும், மு.க. ஸ்டாலின் விருது: பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது: அமரர் குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படுவதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் அ.இளையராஜா ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வண்ணக்கலரில் லித்தோ வால்போஸ்டர் ஜொலித்தது.
இந்த வால்போஸ்டரில்; குறிப்பிட்டிருந்ததாவது: திமுக மும்பெரும் விழாவில் பெரியார் விருது பெறும் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் தவப்புதல்வியும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் அன்பு சகோதரியுமான திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் கழக துணைப் பொதுச்செயாளருமான மாண்புமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களை மனதார வாழ்த்துகிறோம். என்றும் அன்புடன் அ.இளையராஜா, ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், என்ற வாசகத்தோடு பெரியார், கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில நிர்வாகி உமரிசங்கர், செந்தூர்மணி ஆகியோர்கள் படங்களுடன் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த வால்போஸ்டர்கள் அனைத்து தரப்பினர்கள் பார்வையையும் கவர்ந்தது.
செய்தி தொகுப்பு: எம்.கண்ணன்.

