தூத்துக்குடி செப், 15
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பெயரில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேலமடத்தில் வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ.இளையராஜா தலைமையில் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் ஒன்றிய செயலாளர் இளையராஜா
உறுதிமொழியை கூற திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.
அதில், ‘ஒரணி தமிழ்நாட்டில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தையும் சேர்த்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் தொகுதி மறுவரையறையை எதிராக போராடுவேன், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக வாக்காளர்களின் உரிமையை பறிக்கு SIR-யை எதிராக நிற்பேன், இளைஞர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நிற்பேன், மாணவர்களின் உரிய கல்வி நிதிக்காக போராடுவேன்’ போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
KING கண்ணன்

