தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!

தூத்துக்குடி,செப், 14
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓன்றிய பாஜக அரசாக இருந்தாலும் சரி, தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுகவாக இருந்தாலும் சரி அவர்கள் என்ன வாக்குறுதி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று எடுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி நெருக்கடி இருந்த போதிலும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செய்து வருகிறார். சொல்லாததையும் கூட செய்து வருகின்றோம். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்படவில்லை. ஆனால் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக குற்றம் சுமத்துவாா்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்த பல்வேறு சாதனை திட்டத்தின் மூலம் தொழில், பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று பலன் அடைந்து வருகின்றார்கள். நிச்சயமாக மக்கள் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் 2026ல் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று பணியாற்றுவாா்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் வருகின்ற இடம் எல்லாம் கூட்டம் இருந்தது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? விஜய் கட்சியில் கட்டுப்பாடு, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்த வேண்டும்.. வரையறை இல்லாமல் இருக்கிறது.. அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. விரைவில் கற்று கொள்வார்கள் திமுகவில் கடமை கண்ணியம் கட்டுபாடு கொள்கை கோட்பாடுகளை இன்று வரை கடைபிடித்து வருகின்றோம். ஓரணியில் தமிழ்நாடு என்ற நடைமுறையை ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர்் சோ்க்கையை சேர்த்துள்ளோம் அதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனா். நாளைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியபடி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை பாகமுகவா்கள் கூட்டத்தில் எடுத்து கொள்ள உள்ளனா். அதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழன் தலைநிமிர்ந்து நடப்பதற்கு முதலமைச்சர் தான் காரணம் என்று கூறினாா்.
மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளா் பிரபு, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், ஆகியோர் உடனிருந்தனா்.

