தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் வாங்கிய
பார்சல் சாப்பாட்டில் பூரான் :
சாப்பாடு சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாந்தி மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!
================

தூத்துக்குடி பால விநாயகர் கோவில்
தெருவில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் இன்று
வாங்கிய சாப்பாட்டில்
பூரான் கிடந்ததால் அந்த சாப்பாட்டை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரை சார்ந்த ஒரு குடும்பத்தினர் அவர்கள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலருக்கும் சாப்பிடுவதற்கு தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள பிரபல ஹோட்டலில் நேற்று சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர். இந்த பார்சல் சாப்பாட்டை இன்று மதியம் ஹோட்டலில் இருந்து வழங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் வாடிக்கையாளர் அவர்களது வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களுக்கு சாப்பாடு பரிமாறியுள்ளனர் இதில் குழம்பில் பூரான் கிடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அதற்குள் இந்த சாப்பாடு சாப்பிட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாந்தி மயக்கம் அடைந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தங்களது வீட்டில் நடைபெற்ற இல்ல நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்த நிலையில் அந்த சாப்பாட்டில் பூரான் கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்படி பிரபல ஹோட்டலில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் ஹோட்டல் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பூரான் கடந்த சாப்பாடு சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு வாந்தி மயக்கம் இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

