காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ். பி. மாரியப்பன் தகவல்!””
தூத்துக்குடி ஆகஸ்ட்2

பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடைபெறும் என
பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ். பி. மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தெரிவித்ததாவது
பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் ஆகிய என் தலைமையில்
கடந்த ஜூலை 21ஆம் தேதி தூத்துக்குடி
விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில்
மாபெரும் உலகத் தலைவர் காமராஜரை எந்த ஒரு அடிப்படை தகுதியும் இல்லாத திமுக எம்.பி. திருச்சி சிவா என்பவர் இழிவுபடுத்தி பேசியது நாடார் சமுதாயத்தினரை மட்டுமட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினர் மற்றும் கட்சியினர் மனதை புண்படுத்தியுள்ளது. அப்படி அனைத்து மக்களுக்கும் தலைவராக இருக்கக்கூடிய கர்ம வீரர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், திருச்சி சிவா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்.
திருச்சி சிவா மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்துகிறது. எம்பி திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகையின் போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏற்றப்படும் என தெரிவித்திருந்தோம் இந்நிலையில் வருகிற 4 ம் தேதி தூத்துக்குடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக
வருகை தரும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி சிவாவை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

