தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குருஸ்பா்ணாந்து பெயரை சூட்ட வேண்டும் :
ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி
ஆட்சியரிடம் கோாிக்கை!”
தூத்துக்குடி ஜூலை 31,
தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் குரூஸ்பர்ணாந்து பெயரை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று கலெக்டா் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கலெக்டா் இளம்பகவத் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்வேன் என்று உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாநகரச் செயலாளர் இக்னேஷ்யஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வார்டு தலைவர்கள் சேவியர் மிசியர், சுரேஷ் குமார், சேகர், ஷேக்ஸ்பியர், மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மற்றும் முத்து, கிரிதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

