• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி

policeseithitv by policeseithitv
July 20, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,ஜூலை, 20

தமிழகத்​தில் 2026
சட்​டப்​பேரவை
தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற
பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை       மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயனப்படவுள்ளார். “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற லட்சியத்தோடு, 24.7.2025 முதல் 8.8.2025 வரை இரண்டாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டஙளில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி அடுத்த மாதம் 1, 2 ஆகிய 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அவரது வருகையையொட்டி மிக பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக வர்த்தக அணி சாா்பில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கைலாஷ் திருமண மஹாலில் நேற்று 19 ம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2026 இல் அதிமுக வெற்றி அடைந்தது என்ற வெற்றிகணியை எடப்பாடியார் வசம் சமர்ப்பிப்போம் என்ற உறுதிமொழியை தற்போது அனைவரும் எடுத்துக்கொள்வோம். என்றார். அதுபோல் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் எந்த ஒரு இயக்கத்தை தீய சக்தி என்றார்களோ அவர்களிடம் நம்மில் ஒரு சிலர் மறைமுக உறவு வைத்துக் கொண்டு நமது இயக்கத்துக்கு துரோகம் விளைவிக்கிறார்கள் அவர்கள் ஒருபோதும் நல்லா இருக்க முடியாது அவர்கள் செய்யும் துரோகம் புரட்சித் தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் செய்யும் துரோகம் என்று ஆவேசமாக பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக கோட்டையாக விளங்க கூடியது . அந்த நிலையை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று பேசியவர் தமிழகத்தில் திமுக குடும்ப ஆட்சி எப்படி நடத்துகிறதோ?? அதுபோல் தூத்துக்குடியில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வருகிற தேர்தலில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதிகளையும் கைப்பற்றுவது உறுதி என்று பேசினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி வருகை முன்னிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் வகையில் வர்த்தக அணி சார்பில் நடைபெற்ற கூட்ட ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் என அதிமுகவினர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டதால் தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஒரு மாநாடாக மாறியது. அந்த அளவிற்கு ஒரு எழுச்சிமிகு கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஏற்பாட்டில் சிறப்பாக நடத்தப்பட்டது. .கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில்,கழக அமைப்பு செயலாளர் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என். சின்னத்துரை முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சியான பாஜகவின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சித்தாரங்கள் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் கழக வர்த்தகஅணி இணைச் செயலாளர் சாத்தான்குளம் ஆனந்த ராஜா,அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் இரா ஹென்றி,அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் செங்கான்,கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணா என்ற ராதாகிருஷ்ணன்,கழக வர்த்தகஅணி துணை செயலாளர் மில்லர் ஆர்.எல். ராஜா, பகுதி கழக செயலாளர் முன்னாள் தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ.எஸ்.சேகர்,கழக பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன்,மாவட்ட கழக இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ்,மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி,கழக மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய் ,பகுதி கழகச் செயலாளர் பொன்ராஜ் முன்னாள் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம்,

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,
முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்,
முன்னாள் தொகுதி கழகச் செயலாளர்புகழும் பெருமாள்,
திருச்செந்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் லிங்க குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சங்கர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மீனவர்களின் மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், ரயில்வே மாரியப்பன் ஆசைத்தம்பி, பழனி, பாத்திமா நகர் புல்டன் ஜெசின், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சகாயராஜ், சிறுபான்மை பிரிவு மாநகராட்சி ஓய்வு அலுவலர் அசன், மணிகண்டன் என்ற ஐயப்பன் மற்றும்
தலைமை கழக மாவட்ட சாா்பு அணிகள், ஒன்றிய, நகர பேரூர் கிளைக்கழகம், வட்டக்கழகம், தொழிற்சங்கம், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் பேரூராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பல்வேறு நிர்வாகிகள் தெரிவித்ததாவது . முன்னாள் அமைச்சர்
செல்லப்பாண்டியன் அவர்கள் எடுத்த முயற்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் முகத்தில் தற்போது தான் ஒரு உற்சாகம் தெரிய வருகிறது . இது போன்ற ஒரு கூட்டம் பெயரளவில் ஆலோசனைக் கூட்டம் ஆனால் இங்கு கூடியிருக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது ஒரு மாநாடாக மாறிவிட்டது . இதே நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என பல்வேறு நிர்வாகிகளும் பேசி அமர்ந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டம் எழுச்சி கூட்டமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றவுடன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரையும் அறுசுவை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து தொண்டனோடு தொண்டனாக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் செயல்பட்டது. அதிமுகவினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இன்று அமைக்கப்பட்ட இந்த கூட்டம் தொடர்மேயானால் திமுக கலக்கமடைவதில் ஐயமில்லை என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள் மொத்தத்தில் எடப்பாடி வருகை ஆலோசனை கூட்டம் எழுச்சிமிகு மாநாடாக மாறியது…என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள் மொத்தத்தில் எடப்பாடி வருகை ஆலோசனை கூட்டம் எழுச்சிமிகு மாநாடாக மாறியது…

Previous Post

முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரி நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மனு

Next Post

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா 10 தினங்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தூத்துக்குடியில் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் – எஸ்.பி.மாரியப்பன் பேச்சு

Next Post
காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா 10 தினங்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தூத்துக்குடியில் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி  மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் – எஸ்.பி.மாரியப்பன் பேச்சு

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா 10 தினங்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தூத்துக்குடியில் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் - எஸ்.பி.மாரியப்பன் பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In