அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரமணியன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் “ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று சாத்தியமில்லாத திட்டத்தை அறிவித்துள்ளது. அதனால் அதிமுக தேர்தல் அறிக்கையை தடைசெய்ய வேண்டும் என புகார் மனுவில் வழக்கறிஞர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


