கயத்தார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு நாகம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அன்னராஜ் மகன் கனகராஜ் (29) மற்றும் தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலை (52) இவர்கள் இருவரும் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி வெள்ளாளன் கோட்டை சாலை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2பேரையும் எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.

