தூத்துக்குடி,
ஏப்ரல், 30
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய அங்கான்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஒட்டி மேட்டுப்பட்டி சுந்தரவேல்புரம் ஆகிய இரு இடங்களில் 47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி திறப்பு விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் பொறுப்பு காயத்ரி வரவேற்புரையாற்றினார்.
புதிய அங்கன்வாடி மையத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோருடைய நலனிலும் அக்கறைகொண்டு செயல்படுகிறாா். எல் அண்டி நிறுவனம் பல தொண்டு காாியங்களை செய்து வருகிறது அதனடிப்படையில் அங்கன்வாடி மையம் கட்டித்தரவேண்டும் என்று கோாிக்கை வைத்தோம் அதனை ஏற்றுக்கொண்டு இரண்டு அங்கன்வாடி மையங்கள் நான்கே மாதத்தில் நல்ல முறையில் கட்டுக்கொடுத்துள்ளனா். அவா்களை பொறுத்தவரையில் கல்விக்கென்று தான் அதிக நிதிஓதுக்கீடு செய்வாா்கள் நமது கோாிக்கையை ஏற்று இதை செய்து கொடுத்துள்ளனா். இதன் மூலம் பலா் பலனடைந்து வருகின்றனா். ஏழை எளிய மக்கள் சுகாதார மான முறையில் வாழ வேண்டும் நல்ல கல்வி கிைடக்க வேண்டும். அங்கன் வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கழிப்பறை தண்ணீர் வசதி என கட்டமைப்புகள் முழுமையாக உருவாக்கி ஊரக பகுதி மட்டுமின்றி நகா்புறங்களிலும் பராமாிக்க வேண்டும் இந்த ஆண்டு 150 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்படும் கர்ப்பினி தாய்மாா்கள் சந்திக்கும் பல இடையூறுகளையும் தவிர்க்கும் பொருட்டு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் தொடர்ந்து நல்ல பணிகளை மேற்கொள்ளும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். என்று பேசினாா்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கோட்டாட்சியர் பிரபு தாசில்தார் முரளிதரண் துணை மேயர் ஜெனிட்டா பொறியாளர் தமிழ்செல்வன் நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனிர்அகமது உதவி ஆணையர் சுரேஷ் குமார் கவுன்சிலர்கள் பவானி நாகேஸ்வரி தெய்வேந்திரன் அந்தோணி பிரகாஷ் மார்சலின் ஜான்சிராணி எல்.என்.டி நிறுவனத் தலைவர் மீனா சுப்ரமணியம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபிஇ திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ் மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார் தங்கம் அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன் கவிதா தேவி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன் நிக்கோலஸ் மணி பார்வதி பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம் மாநகர அணி துணை அமைப்பாளர்கள் கருப்பசாமி சந்தனமாரி நாராயண வடிவு முன்னாள் கவுன்சிலர்கள் அமாலுதீன் சாந்தா வட்டச் செயலாளர்கள் ரவிசந்திரன் சதீஷ்குமார் முனியசாமி வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர் ஆறுமுகம் மார்ஷல் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் இசக்கிமுத்து ரேவதி மணி செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

