தூத்துக்குடி., ஏப்ரல், 1
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் தமிழகம் முழுவதும் திறக்க முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அதிமுகவினரால் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) முன்பு 33 – வது வட்ட செயலாளர் மில்லை ஆர்.எல்.ராஜா ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் தர்பூசணி போன்ற பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார். முன்னதாக நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை
33 – வது வட்ட அதிமுக செயலாளர் மில்லை ஆர்.எல்.ராஜா பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து 100 மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் அவர் அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் திமுக ஆட்சியில் உள்ள வேதனைகளையும்
செல்லப்பாண்டியன்
எடுத்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ், தூத்துக்குடி அதிமுக 46 வட்ட செயலாளர், கிழக்கு பகுதி தலைவர், கிழக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், புல்டன் ஜெசின், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர், ரத்தினம், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர், அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பா, சாந்தி, முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், இயக்குனர் அன்புலிங்கம், முன்னாள் வட்ட செயலாளர்கள் மோகன், பாக்யராஜ், முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள், தருவை அமல தாசன், பெருமாள் தாய், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர், மற்றும் அந்தோனி ராஜ், பாபநாசம், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ்குமார், மகராஜன், தளவாய் புரம் காசி, ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், நயினார், சுப்புராஜ், ஜோதிகா மாரி,ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம், ராஜேஷ், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், மகளீர் அணியினர் ஜிபுலியா, பபினாம்மா, பாப்பா, முத்துமாரி, மாரியம்மாள், லெட்சுமி உட்பட கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

