ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா எஸ்பி பட்டணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் திறக்கப்பட்டது.
திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் அயலக அணி துணை அமைப்பாளரும், எஸ்பி பட்டணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சகுபர் சாதிக் கலந்துகொண்டு அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தி அயலக அணி சார்பில் வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாழ்த்துக்கள் பரிமாறினர் எஸ்பி பட்டணத்தில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி பலரும் பங்கேற்றதால் விழாக்கோலம் பூண்டது.

