தேவகோட்டையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா முறைப்படி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளர் H. ராஜா தேவகோட்டை ராம்நகர் கௌரி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு முறைப்படி முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
தேவகோட்டை நகர் முழுவதும் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார் பின்னர் பேசுகையில், ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த பொழுது காரைக்குடி பகுதியில் 12 மில்கள் மூடப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தாள் தேவகோட்டையில் மூன்றே மாதத்தில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்படும் எனவும் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வரப்படும் எனவும் காரைக்குடி தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் எனவும் அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அனைத்து கோவில் குளங்களும் நீர்நிலைகளும் சுத்தம் செய்யப்படும் . என்று வாக்குறுதி அளித்தார்.இதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சோழன் பழனிச்சாமி.முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சுந்தரலிங்கம்,நகர செயலாளர் ராமச்சந்திரன்,பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் நகர தலைவர் பஞ்சநாதன் மாவட்ட மகளிர் அணித்தலைவி கோமதி நாச்சியார்.அதிமுக மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் சென்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


