தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நீண்டநாள் கோாிக்கையான வீட்டுமனை சம்மந்தமாக தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை நேரில் செயலாளர் மோகன்ராஜ் வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி இதுவரை நடந்த விபரங்களை எடுத்துக் கூறி மனு அளித்தார். தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி அனைத்து பத்திாிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வருவது குறித்து கலெக்டாிடம் தெரிவிக்கப்பட்டது.
அதுபோன்ற எந்த நடவடிக்கைகளிலும் பத்திாிகையாளர்கள் ஈடுபட வேண்டாம் கண்டிப்பாக அனைத்து பத்திாிகையாளர்களுக்கும் வீட்டு மனை பட்டா கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் இது குறித்து அருகில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் பிரபுவிடம் பத்திாிகையாளா்களுக்கு விரைந்து வீட்டு மனை பட்டா கிடைத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், ராஜன், டேவிட்ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

