தூத்துக்குடி,
ஜனவரி, 26,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பன் ஊர் பொதுமக்களோடு வந்து கோரிக்கை மனு அளித்தார்.
76 வது குடியரசு தின விழா முன்னிட்டு சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் இன்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் அதன் நிர்வாகிகள், மற்றும்
சேர்வைகாரன்மடம் கிழக்கு பகுதி, சக்கம்மாள்புரம் காமராஜ் நகர் பகுதியை சோந்த பொதுமக்கள் மற்றும் பெண்களோடு வந்து
இந்த ஊராட்சி பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்து வந்ததால் தற்போது தனி அலுவலர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இந்த
கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள குப்பை கழிவுகளை நீர் நிலைகளில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தனி அலுவலர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குப்பை கழிவுகளை பஞ்சாயத்து பகுதிகளில் ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக கொட்டுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
மேலும் சேர்வைகாரன்மடம் பகுதியில் அமைந்துள்ள காமாராஜர் சிலை முன்பு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கடந்த 5 வருடங்களாக கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படும் வகையில் சிலர் ஆக்ரமிப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து சேர்வைகாரன் ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் அளித்தும் காமராஜர் சிலை அருகே உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற முன் வராமல் முந்தைய ஊராட்சி நிர்வாகம் இருந்து வந்தது. தனி அலுவலர் காமராஜர் சிலை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் அதே சமயத்தில் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிப்பிடத்தை சிலர் தேவையில்லாமல் தங்களது சுயலாபத்திற்காக பெண்கள் கழிப்பிடமாக மாற்றி அமைத்தனர். ஆண்கள் கழிப்படமாக இருக்கும் பொழுது அருகில் உள்ள கம்பெனிகள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தினார். தற்போது பெண்கள் கழிப்பிடமாக மாற்றிய பின்பு எந்தவித பயன்பாடும் இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இதனை முன்பு இருந்த நிலையிலே ஆண்கள் கழிப்பிடமாக மாற்ற தனி அலுவலர் நடவடிக்கை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் காமராஜர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் மறைவுற்றால் அவர்களுக்கு மயானம் சாயர்புரம் பல்கருகே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கும் பொதுமக்களிடம் 500 1000 என வசூலிக்கப்படுகிறதாம். இதனால் காமராஜர் நகர் பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அந்தப் பகுதியில் மயானம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு மாவட்ட நிர்வாகம் தனி அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
குடியரசு தின விழா முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தனி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சேர்வைக்காரன் மடம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜக்கம்மாள்புரம், காமராஜர் நகர், கிழக்குத் தெரு, ஆகிய பொதுமக்களுடன்
இணைந்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் தனி அலுவலரிடம் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கொடுத்த கோரிக்கை மனு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஏற்படுத்தி உள்ளது.
காமாராஜர் சிலை முன்பு ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆண்கள் கழிப்பிடமாக மீண்டும் மாற்ற வேண்டும், காமராஜர் நகர் பகுதியில் மாயானம் அமைக்க வேண்டும், நீர்நிலைகளில் கழிவு குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி முன்வைத்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார்
பெருந்தலைவர் மாவட்ட பொருளாளர் தேவராஜ் .இளைஞரணி செயலாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

