=========
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழன்டா கலைக்குழு சார்பாக சங்கமம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழன்டா சங்கமம் 2025 ஜனவரி 11,12 சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சீரும் சிறப்பாக தூத்துக்குடியை அதிர வைக்கும் நிகழ்ச்சியாக ஒட்டுமொத்த கலைஞர்களை வரவழைத்து அனைத்து பாரம்பரிய உணவு வகைகள் மருத்துவ வகைகள் மரத்தான் நிகழ்ச்சி மற்றும் ஓட்டப்பந்தயம் கலை நிகழ்ச்சிகள் கரகாட்ட நிகழ்ச்சிகள் கொம்புத்துப் நிகழ்ச்சிகள் தப்பாட்ட நிகழ்ச்சிகள் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முன்னதாக இன்று 11ம் தேதி2 வது மாபெரும் தமிழன்டா சங்கமம் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தமிழர் பண்டிகையாம் பொங்கல் கொண்டாடத்துடன் இனிதே ஆரம்பம் ஆகியது.


தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாட்டுபுற கிராமிய இசைக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் ஆறுமுகநேரி தலைவர் எம் கே காளிதாசன் செயலாளர் டி சேர்ம துரை பொருளாளர் ஓ மயில்சாமி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜனவரி
11,12 ஆகிய இரு தினங்களும் மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.
காலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழன்டா விருதுகள், பரிசுகள், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் SP மாரியப்பன் பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடிய வீரர்கள் ஆகியோர்களுக்கு
தமிழன்டா விருது, பரிசுகள் சான்றிதழ்கள், ஆகியவற்ற எஸ்.பி மாரியப்பன் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு
உடன் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் காமராஜர் நகர் ரஞ்சித், சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளருக்கு தமிழன்டா நிறுவன ஜெகஜீவன் உற்சாக வரவேற்பு கொடுத்து பொன்னாடை போற்றி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாவட்டச் செயலாளர்
எஸ் பி மாரியப்பன் தெரிவித்ததாவது
தமிழர் பாரம்பரியமான விளையாட்டு,கலை, உணவு, கலாச்சாரம் ஆகியவற்றை முன்னெடுத்து தமிழன்டா சங்கமம் நிகழ்ச்சி இரண்டாவது வருடமாக நடத்தி வரும் ஜெகஜீவன் அவர்களின் பணி சிறப்பு மிக்கது. பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் மனிதநேயர் என் ஆர் தனபாலன் தன்னுடைய வாழ்த்துச் செய்தியை தமிழன்டா சங்கம் நிகழ்ச்சிக்கு தெரிவிக்க கேட்டுக்கொண்டார் இது போன்ற தமிழ் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்ட தமிழன்டா இயக்கம் நிறுவனர் செய்து வரும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி முழு உறுதுணையாகவும் எமது கட்சி நிர்வாகிகள் முழுமையாக பங்கேற்பார்கள் என்று தனது உரையில் தெரிவித்தார்…

