• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி டவுண் பகுதியில் பணியாற்றிய  2 எஸ்.ஐ க்கு பிரிவு உபச்சார விழா : மதன் ஐபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ் 

policeseithitv by policeseithitv
January 5, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி டவுண் பகுதியில் பணியாற்றிய   2 எஸ்.ஐ க்கு பிரிவு உபச்சார விழா : மதன் ஐபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

==============

தூத்துக்குடி மாவட்டம் டவுண் பகுதியிலுள்ள காவல் நிலையமான தென்பாகம் காவல் நிலையம், வடபாகம் காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர்கள், மாணிக்கராஜ், சுப்புராஜ், ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு

பிரிவு உபச்சார விழா கொடுக்கும் வகையில் டவுண் ஏஎஸ்பி மதன் ஐபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ் மூலம் போலீஸார்கள்

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடினர். தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் நேர்மையின் சிகரம் டாக்டர் மதன் ஐபிஎஸ் இவர் பொறுப்பேற்ற தினத்திலிருந்து டவுண் பகுதியில் நடைபெற்று வந்த பல்வேறு சமூக விரோத செயல்கள்

கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பாக கஞ்சா விற்பனை கும்பல், ரேஷன் அரிசி கடத்தல் கும்பல், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த பெருமை மதன் ஐபிஎஸ் ஐ சாரும் டவுண் பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் முதல், ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கி சமூக விரோத செயல்களை

அடியோடு ஒழித்து பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்து அவர்களை அரவணைப்போடு

வேலை வாங்கக் கூடியவர் மதன் ஐபிஎஸ் இதனால் டவுண் பகுதியில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை உற்சாகமாகவும், துணிச்சலுடனும் பணியாற்றி வருகிறார்கள். தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மாணிக்கராஜ், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு திறம்பட செயல்பட்டவர்.

அவர் தற்போது

புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல் வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ் ஐ சுப்புராஜ் சிப்காட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி டவுண் பகுதியில் பணியாற்றி வந்த 2

எஸ். ஐ களும் தற்போது ரூரல் பகுதிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் ஐபிஎஸ் தனது அலுவலகத்திற்கு இரண்டு எஸ்ஐ களையும் வரவழைத்து

அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா ஒன்று நடத்தினார்.

மதன் ஐபிஎஸ் அவர்களின் கீழ் இரண்டு எஸ்ஐகளும் பணியாற்றிய காலகட்டத்தில் அவர்கள் செய்த அதிரடி பணிகளை சுட்டிக்காட்டி அதற்கு பாராட்டியதோடு, தற்போது பணியிடம் மாறுதல் செல்லும் இடங்களிலும் இதுபோன்று சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 2 எஸ்.ஐ. களுக்கும்

சால்வை அணிவித்து மதன் ஐபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஏஎஸ்பி அலுவலகத்தில் வைத்து உதவி ஆய்வாளர்கள் 2 பேரையும் வைத்து கேக் வெட்ட செய்து பிரிவு உபச்சார விழாவை சிறப்பித்தார் மதன் ஐபிஎஸ்.

தனக்கு கீழ் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர்கள் பணி மாறுதல் சென்றாலும் அவர்களை மரியாதை செய்தும்,கவுரவ படுத்தியும்,ஊக்கப்படுத்தியும் வழியனுப்பிய தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளரின் செயல் பாராட்டுக்குரியது. காவல்துறைக்கு மதன் ஐபிஎஸ் பங்கு மணி மகுடம் என டவுண் பகுதியில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பாராட்டி வருகிறார்கள். போலீஸ் செய்தி குழுமம் சார்பில் மதன் ஐபிஎஸ் இன் மனிதநேய பணிக்கு ராயல் சல்யூட்…

செய்தி தொகுப்பு

M. ஆத்திமுத்து போலீஸ் செய்தி

Previous Post

ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் – 4வது பதவியேற்பு விழா

Next Post

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் சார்பில் மினி மாரத்தான் போட்டி :  மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் சார்பில் மினி மாரத்தான் போட்டி :   மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் சார்பில் மினி மாரத்தான் போட்டி :  மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In