தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜூடோ போட்டிகள் டிசம்பர் 21, 22 ஆகிய நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் 400க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் சுழற் கோப்பையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியினர் முதலாம் இடத்தையும் தமிழக காவல்துறை அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்; சீனியர் பிரிவினருக்கு பதக்கங்கள் மற்றும் சுழற் கோப்பையை வழங்கினார்.
ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ் பதக்கங்கள் மற்றும் சுழற் கோப்பையை வழங்கினார்கள்
மேலும் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு ஜூடோ சங்க தலைவர் விஜய மோகன முரளி, பொதுச் செயலாளர் நா.முரளி, மூத்த பயிற்சியாளர் மணிக்குமார் விழுப்புரம், மாவட்ட செயலாளர் குணசேகரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் மோகித், திருச்சி மாவட்ட செயலாளர் பிரசாந்த், கரூர் மாவட்ட செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட செயலாளர் முரளி, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெயகர்ணன், சேலம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் ஜூடோ சங்கத்தின் செயலாளர் ராமலிங்க பாரதி செய்திருந்தார்.

