• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக அரசுக்கும்  தமிழ்நாடு அளவில் உள்ள 12000 தனியார் பள்ளிகளுக்கும்,   தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் பாலமாக இருக்கும் : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி அரசகுமார் தகவல்!!

policeseithitv by policeseithitv
November 30, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக அரசுக்கும்   தமிழ்நாடு அளவில் உள்ள 12000 தனியார் பள்ளிகளுக்கும்,    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் பாலமாக இருக்கும்  : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி அரசகுமார் தகவல்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

சென்னை,டிச, 1

 

தமிழக அரசுக்கும்

தமிழ்நாடு அளவில் உள்ள 12000 தனியார் பள்ளிகளுக்கும், ஒரு பாலமாக அமைய உள்ளது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது

: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான பி.டி அரசகுமார் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12,000 க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்குயென பல்வேறு சங்கங்களாக செயல்பட்டு வந்தன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அளவில் ஒரே சங்கமாக உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அனைத்து சங்க நிர்வாகிகளும் இணைந்து எடுக்கப்பட்ட முடிவின்படி ஏற்கனவே நடைபெற்று வந்த

BT அரசகுமார் தலைமையிலான ஆல் இந்தியா பிரைவேட் எஜூகேஷனல் இன்ஸ்டிடூஷன் அசோசியேசன்,

K.R. நந்தகுமார் தலைமையிலான தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் ஹயர் செகெண்டரி மற்றும் CBSE ஸ்கூல்ஸ் அசோசியேசன். D.C. இளங்கோவன் தலைமையிலான பெடெரேஷன் ஆப் அசோசியேசன்ஸ் ஆப் பிரைவேட் ஸ்கூல்ஸ் இன் தமிழ்நாடு. M. ஆறுமுகம் தலைமையிலான பெடெரேஷன் ஆப் பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேசன்ஸ், | மனோகரன் ஜெயக்குமார் தலைமையிலான ஆல் இந்தியா பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேசன், G.R. ஸ்ரீதர் தலைமையிலான தமிழ்நாடு கரெஸ்பாண்டெண்ட்ஸ் அசோசியேசன் ஆப் பிரைவேட் ஸ்கூல்ஸ் இந்த சங்கங்கள் அனைத்தையும் கலைத்துவிட்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்கின்ற பெயரில் ஒரே சங்கமாக இன்று முதல் செயல்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த சங்கத்திற்கு நிறுவனர் மற்றும் மாநில தலைவராக B.T அரசகுமார் அவர்களும் பொதுச்செயலாளர் K.R நந்தகுமார் அவர்களும் பொதுச்செயலாளர்-

D.C. இளங்கோவன் அவர்களும் பொருளாளராக G.R. ஸ்ரீதர் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக M ஆறுமுகம் அவர்களும் சட்ட செயலாளராக | மனோகரன் ஜெயக்குமார் அவர்களும் கொள்கை பரப்புச் செயலாளராக M.D. இன்ஸ்டின் அவர்களும் செயல்படுவார்கள்.

இந்த சங்கம் அரசிடம் கோரிக்கைகள் தீர்மானங்களை முன்வைத்து அரசுக்கும் பள்ளிகளுக்கும் பாலமாக இருந்து தமிழகத்தில் தலைசிறந்த கல்வியை தருவதாக சபதம் ஏற்று அனைவரும் ஒற்றுமையோடு மேற்கண்ட சங்கத்தின் மாநில தலைவர்

பி. டி .அரசகுமார் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த இச்சங்கத்தில் உயர்நிலைக் குழு, தலைமைச் செயற்குழு, மாநில பொதுக்குழு, மண்டல நிர்வாகக் குழு, மாவட்ட நிர்வாக குழு என ஆயிரம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், CBSE மற்றும் ICSE உள்ளிட்ட பிறவாரிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சங்கமாக இருந்து பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சங்கம் துவக்கப்படுகிறது எனவே அனைத்து பள்ளி தாளாளர்களும் பாகுபாடின்றி ஒத்துழைப்பு நல்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு சட்டம் உள்ளது போல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இன்ன பிற ஊழியர்களுக்கும் சமூகவிரோதிகளிடமிருந்தும் சட்டத்தை மீறும் ஒரு சில மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்தும் பள்ளிகளையும் பள்ளிகளையும் சொத்துக்களையும் பள்ளிகளில் பணிபுரிவோரின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் வண்ணம் பள்ளிகள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதனால் அரசுக்கு ஒரு பைசா கூட செலவு ஆகாமல் சட்டம் ஒழுங்கு கட்டிக் காப்பாற்ற முடியும்

தனியார் பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் முறைப்படுத்துவதற்கும் அரசின் சார்பில் வல்லுநர் குழு ஒன்றை அமைத்திடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது

தனியார் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள தொடர் அங்கீகாரத்தை உடனடியாக வழங்குமாறும் தகுதிவாய்ந்த தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கும், ஐந்தாம் வகுப்புவரை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பள்ளிகளை எட்டாம் வகுப்புவரை தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது

தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டிற்கான RTE கட்டணத்தை தாமதம் இன்றி வழங்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது

தமிழகத்தில் முறை இன்றி நடத்தப்படுகின்ற Play School-களை முறைபடுத்துமாறும் Play School-களுக்கான அனுமதி வழங்கும் அதிகாரத்தை தனியார் பள்ளிகள் இயக்குனர்க்கு வழங்கிடுமாறும் தமிழக அரசை கேட்டுக் கொள்வது

தனியார் பள்ளிகளின் கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை இயக்குனரிடம் (DTCP) உரிய கட்டணம் செலுத்தி கட்டிட வரைபட அனுமதி பெற்ற பின்னரும் உள்ளாட்சி அமைப்புகளிடம் மீண்டும் கட்டணம் செலுத்தும் நடைமுறையை ரத்து செய்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது

தனியார் பள்ளிகளில் திட்டமிடப்படாத (non-planning) பகுதிகளில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை இயக்குனரிடம் (DTCP) அனுமதி வழங்கப்பட்டு வருவதைப் போல நகர்ப்புற பகுதிகளில் (planning area) கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு வரைமுறைகள் படுத்தி DTCP/CMDA கட்டிட வரைபட அனுமதி வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்று பல பள்ளிகள் நடத்தி வரும் Group of School மற்றும் செயின் ஆப் ஸ்கூல்ஸ் என்கிற பெயரில் நடைபெறும் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது. பெயரில் NEET…JEE போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் என்கிற அரசு அனுமதி இன்றி சில பள்ளிகள் பெற்றோர்களையும்

மாணவர்களையும் இன்னல் படுத்துவதை ஆராய்ந்து இதற்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து கண்காணித்து மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத படி பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது.

தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாக பயிலும் மாணவர்கள் மாற்றுப் பள்ளிகளுக்குச் செல்லும் பொழுது ஏற்கனவே படித்துக் கொண்டிருந்த பள்ளியில் உரிய கல்வி கட்டணத்தை செலுத்தாமல் EMIS நெம்பரை பயன்படுத்தி பிற பள்ளிகளில் சேர்க்கை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் பள்ளிகளில் NOC பெற்று வர வேண்டுமென உத்தரவிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது.என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது

சங்கத்தின் மாநில தலைவர்

பி. டி .அரசகுமார் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது

பொதுச்செயலாளர் K.R நந்தகுமார் அவர்களும் பொதுச்செயலாளர்-

D.C. இளங்கோவன் அவர்களும் பொருளாளராக G.R. ஸ்ரீதர் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக M ஆறுமுகம் அவர்களும் சட்ட செயலாளராக | மனோகரன் ஜெயக்குமார் அவர்களும் கொள்கை பரப்புச் செயலாளராக M.D. இன்ஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்குயென பல்வேறு சங்கங்களாக செயல்பட்டு வந்தன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அளவில் ஒரே சங்கமாக உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில்

பல்வேறு முக்கிய சங்கங்கள் தனித்தனியாக செயல்பட்டு வந்தது கலைக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் உருவாகி மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவதற்கு தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து துணைத் தலைவி மீது பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்!!!

Next Post

தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

Next Post
தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In