• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து துணைத் தலைவி மீது பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்!!!

policeseithitv by policeseithitv
November 29, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்ரீமூலக்கரை டூ ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோடு மின் விளக்கு வசதி கேட்டு கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, நவ, 29

 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை எண் 10144 இடத்தின் உரிமையாளரும்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.மாரியப்பன்

சேர்வைக்காரன்மடம்

பஞ்சாயத்து துணைத் தலைவி மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடம் பரபரப்பான புகார் மனு ஒன்று அளித்துள்ளார் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது :

நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்து பணியாற்றி வருகிறேன். நான் சார்ந்த அரசியல் கட்சியின் சார்பில் பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது மட்டுமல்லாமல் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் எந்தவித பாரபட்சமின்றி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலின் போது எனது குடும்பத்தினர்

சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்றத்தில்

மக்கள் பிரதிநிதி பொறுப்பிற்கு போட்டியிட கூடும் என்ற அச்சத்திலும், எனக்கு இப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நற்பெயருக்கும் மக்கள் செல்வாக்கிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் ஜெபஸ்டின் ஆகியோர் உண்மைக்குப் புறம்பான பல்வேறு தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் எதிராக பரப்பி வருவதோடு, லஞ்சம் கொடுக்க முன்வராததால் எனக்கெதிராக சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் காமராஜ் நகர் பகுதியில் எனது சொந்த இடத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை எண்: 10144 இயங்கி வருகிறது. இதற்கு மாதம் ரூ.3500 அரசு வாடகை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது. அதன் அருகில் அரசு மதுபான பார் இயங்கி வருகிறது. இந்த அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவை இந்த இடத்தில் அமைப்பதற்கு முன்பு அரசு விதிமுறைகள் முழுவதுமாக பின்பற்றபடுகிறதா என்பதை அரசு உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் ஆய்வு செய்த பின்னரே டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு அனுமதி அளித்தனர்

இந்தக் கடை அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகில் பள்ளிகள்,

கல்லூரிகள், ஆலயங்கள், விளையாட்டு மைதானங்கள், நெருக்கமான குடியிருப்புகள் ஏதுமில்லாமல் ஊருக்கு வெளிபுறத்தில் அமைந்திருந்ததால் மாவட்ட நிர்வாகம், அரசு டாஸ்மாக் நிறுவனம் மேற்படி பகுதியில் அரசு மதுபான கடை அமைப்பதற்கு முழு அனுமதி வழங்கியிருந்தது. தற்போது பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்படி கடை செயல்பட்டு வருகிறது.

ஆனால், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக பதவி வகித்து வரும் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் ஜெபஸ்டின் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் 2023-ல் எஸ்.பி.மாரியப்பன் ஆகிய என்னிடம் ‘அரசு மதுபான விற்பனை டாஸ்மாக் கடை எண்: 10144 உங்கள் சொந்த இடத்தில் இருந்தாலும் கூட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் ஊராட்சி மன்ற துணைத்தலைவி என்ற அடிப்படையில் எங்களுக்கு ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு இலட்சம்) லஞ்சமாக தர வேண்டும்’ என கேட்டு மிரட்டினர்.

ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் ஜெபஸ்டின் ஆகிய இருவரும் கேட்ட லஞ்சப்பணத்தை நான் கொடுக்க முன்வராததால், அன்றைய தினத்திலிருந்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு வஞ்சக சதி திட்டம் தீட்டி தொடர்ந்து பல்வேறு பொய் புகார்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், காவல்துறை, அரசு உயரதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

சேர்வைக்காரன்மடம் கிராம மக்கள், காமராஜ்நகர் பகுதி பொதுமக்கள் யாரும் மேற்படி டாஸ்மாக் கடைக்கு எதிராக அல்லது எந்த ஒரு புகாரோ தெரிவிக்காத நிலையில், சிலமாதங்களாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றும் வகையிலும், தமிழக அரசிற்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் விதமாக ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் அப்பாவி பெண்களை அழைத்து வந்து, டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்பதை மறைத்து சம்பள ஊதிய உயர்வு கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறி, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் பெண்களை அழைத்து வந்து ஏமாற்றி போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கும், கூடுதல் ஆட்சியர் அவர்களுக்கும், உண்மைத்தகவலை தெரிவித்தது மட்டுமல்லாமல் ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா மீது நடவடிக்கை வேண்டி 18.01.2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அதன் மனு எண் 228/2024 ஆகும்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், தாசில்தார் ஆகியோர்கள் நேரில் களஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், அரசு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றித் தான் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகள் இல்லை என்பதை தெளிவாக உறுதிபடுத்தி விட்டனர்.

அதன்பிறகு, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக மேற்படி டாஸ்மாக் கடை எண்: 10144-யை அகற்றக்கோரி ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் ஆஜராகி எந்தவித விதிமுறை மீறல் இல்லை என்றும், சேர்வைக்காரன்மடம் கிராம மக்களோ, கடை அமைந்துள்ள காமராஜர்நகர் பகுதி பொதுமக்களோ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத பட்சத்தில் அரசு விதிமுறைப்படி செயல்பட்டு வரும் அந்த டாஸ்மார்க் கடையை அந்த கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் கணவர் ஜெபஸ்டின் ஆகியோரே தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பியது தெரியவந்ததாலும்

மேற்கண்ட அரசு டாஸ்மாக் கடை அரசு விதி முறைகளை மீறாமல் அரசு தெரிவித்துள்ள விதிமுறைப்படி தான் செயல்படுகின்றது

என்பதால் தூத்துக்குடி டாஸ்மாக் நிறுவனம் மேற்கண்ட வாதங்களை முன்வைத்து

ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கடை எண்:10144-யை அகற்றக் கோரி ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா தரப்பினர் தொடர்ந்த வழக்கு விபரம் மற்றும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விபரம் அடங்கிய கோப்புகள் உள்ளன என்பதை பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.

அதன்பிறகு செய்வதறியாமல் திணறி வந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் இடம் மாற்றம் வரும் பொழுது, பழைய அதிகாரிகளிடம் கொடுத்த புகார் மனுக்களை மறைத்து விட்டு, புதியதாக புகார் மனுக்களை கொடுப்பது போன்று மேற்படி டாஸ்மாக் கடை பற்றி உண்மைக்குப் புறம்பான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கு தெரிவிப்பதும், வாடிக்கையாகி வருகிறது. முந்தைய காலகட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் பஞ்சாயத்து துணை தலைவர் தெரிவித்த புகாருக்கு வருவாய்த்துறை, கலால் அதிகாரிகள் கூடுதல் ஆட்சியர் ஆகியோர் நேரில் வந்து மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மேற்கண்ட நபரின் புகார் நம்பத் தகுந்தது அல்ல என்று முடிவு செய்த பிறகும் மீண்டும் இந்த கடை பற்றி துணை தலைவர் புகார் தெரிவித்துள்ளதால்

முந்தைய அதிகாரிகள் செய்த விசாரணை அறிக்கையையும்

பழைய கோப்புகளை புதிய அரசு அதிகாரிகள் பார்க்கும்பொழுது ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டாவின் புகார் மனுவின் உண்மை நிலை தெரியக்கூடும்

துணைத் தலைவி அளித்து வரும் பல்வேறு புகார்கள்

பொய் புகாரென ஆராயப்பட்டு அம்மனுக்கள் அரசு உயரதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், மேலும், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா 24.11.2024-ல் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்ற கிராமசபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மேற்படி கடை எண்:10144-யை அகற்றக் கோரி தனிப்பட்ட முறையில் ஊராட்சி மன்றத் தலைவியிடம் மனு அளித்துள்ளார். ஊருக்கு வெளியில் அமைந்து உள்ள, இந்த டாஸ்மாக் கடையினால், பொதுமக்களோ, பெண்களோ, விவசாயிகளோ, மாணவர்களோ, சமூக ஆர்வலர்களோ யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மட்டும் தன்னிச்சையாக மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்படி மதுபான கடைக்கு அருகில் கழிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் யாரும் அங்கு செல்லமுடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், மேற்படி கழிப்பிடம் ஆண்கள் கழிப்பிடம் மட்டுமே. பெண்களுக்கான கழிப்பிடம் ஏதுமில்லை. அந்த கழிப்பிடம் ஊருக்கு வெளியே இருந்ததால் ஆண்கள் யாரும் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த ஒரு குற்றச்சாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு மேற்படி கிராம சபை கூட்டத்தில் மனு அளித்துள்ளார். மேற்கண்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கிராம சபை கூட்டத்தில் மேற்படி டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தனிப்பட்ட முறையில் கோரிக்கை மனு அளித்துவிட்டு, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொய் தகவலை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வெளியிடச் செய்துள்ளார். நாளிதழில் 26.11.2024ல் வெளியிடப்பட்டுள்ளது.) அதன் நகல் இணைத்துள்ளேன். சேர்வைக்காரன் மடம் ஊராட்சியில் விசாரித்ததில்

அரசு டாஸ்மாக் கடை 10144யை அகற்ற வேண்டுமென ஏஞ்சலின்ஜெனிட்டா

தரப்பினர் மனு அளித்துள்ளனர் ஆனால் பஞ்சாயத்து

சார்பில் மேற்படி கடைக்கு எதிராக தீர்மானம் எதுவும் நிறைவேற்றவில்லை. மேற்படி கடைக்கு எதிராக தீர்மானம் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றிருந்தால் அது அரசுக்கெதிரான தீர்மானம் ஆகும். அதனை நாங்கள் செய்யவில்லை. துணை தலைவி ஏஞ்சலின் ஜெனிட்டா தான் கொடுத்த மனு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தவறான முன்னுதாரணம். அது கண்டிக்கத்தக்கது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி என்மீது கொண்ட தனிப்பட்ட விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு பல்வேறு பொய்புகார்களை மேற்படி டாஸ்மாக் கடைக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்.

எனவே, சமூகம், அரசு டாஸ்மாக் கடை 10144 என் இடத்தில் இயங்குவதற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து, பொய்தகவல் பரப்பி வரும் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது புகார் மனுவில் மாவட்டச் செயலாளர் எஸ். பி.மாரியப்பன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இவ்வாறு அவதூறுகளை பரப்பி வரும் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 15 /12 /2024 அன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்

சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ள நிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி சார்பில் எடுத்த முடிவு தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்!!

Next Post

தமிழக அரசுக்கும்  தமிழ்நாடு அளவில் உள்ள 12000 தனியார் பள்ளிகளுக்கும்,   தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் பாலமாக இருக்கும் : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி அரசகுமார் தகவல்!!

Next Post
தமிழக அரசுக்கும்   தமிழ்நாடு அளவில் உள்ள 12000 தனியார் பள்ளிகளுக்கும்,    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் பாலமாக இருக்கும்  : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி அரசகுமார் தகவல்!!

தமிழக அரசுக்கும்  தமிழ்நாடு அளவில் உள்ள 12000 தனியார் பள்ளிகளுக்கும்,   தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் பாலமாக இருக்கும் : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நிறுவனர், மாநிலத் தலைவர் பி.டி அரசகுமார் தகவல்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In