தூத்துக்குடி, அக்.30-
தூத்துக்குடியில் அதிமுகவினர் 500 பேருக்கு புத்தாடை, இனிப்புகளை முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வழங்கினார்.
அதிமுக 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அதிமுகவைச் சேர்ந்த 500 பேருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பின் வழிநடத்திய
ஜெயலலிதா வழியில் 3ம் தலைமுறையாக எடப்பாடியார் தலைமையேற்று கட்சியை நல்ல முறை யில் வழிநடத்தி வருவது மட்டுமின்றி இரண்டே கால்கோடி உறுப்பினர்களை உருவாக்கியுள் ளார்.
தேர்தல் நேரத்தில் நாம் பணியாற்றுவதற்கு வசதியாக பூக்கமிட்டி முறையாக அமைக்க வேண்டும். ஏற்கனவே இளைஞர்கள்,
இளம்பெண்கள் கட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தான் இளைஞர் பாசறை உருவாக்கப்பட் டது. அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 10 சதவீதம் வாக்கு
வங்கி நமக்கு குறைந்துள் ளது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்கள். இளம்பெண்களை கட்சியில் சேர்ப்பதற்கு அனைவருமே பணியாற்ற வேண்டும் ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே எனது மறைவிற்கு பின்னால் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக கட்சி இருக்கும் அதை யாரும் அழிக்க முடியாது
என்றார்.
ஜெயலலிதா இருக்கும் போது எப்படி பல துரோகிகள் இருந்து பல சதி செயல்களில் ஈடுபட்டார்களோ, அதுபோல் இப்போதும் சிலர் கட்சிக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கட்டுகோப்பாக
வழிநடத்துகிறார். எம்.பி
தேர்தலில் நாம் படுதோல்வி அடைந்தோம் அது வேதனையான விஷயம் தான்
இருந்தாலும் எம்.பி
தேர்தலை விட எம்.எல்.ஏ தேர்தல் தான் நமக்கு
முக்கியம் என்பதை
நினைவில் வைத்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். கிளைச்செய லாளர் பொறுப்பிலிருந்து தான் எடப்பாடி உள்பட நானும் பல்வேறு பதவி களுக்கு வந்துள்ளோம். இன்று எடப்பாடியார் சுட்சியின் பொதுச்செய லாளராக இருக்கிறார். இதேபோல் உழைக்கின்ற அனைவருக்கும் அதிமுக ஆட்சி அமையும் போது உரிய அங்கீகாரம் வழங்கப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.

