தூத்துக்குடி
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பல்லாவரம் பகுதி வார்டு எண் 13,14,15,16 ஆகிய பகுதிகளிலும். பம்மல் வடக்கு மற்றும் தெற்கு பகுதி வார்டு எண் 5,6,7,8,9,10,11,12 ஆகிய பகுதிகளிலும். தலைமை அறிவிப்பின் படி தனியார் மண்டபத்தில் உறுப்பினர் அடையாள அட்டை உறுப்பினர் அனைவருக்கும் கிடைத்ததா என ஆய்வு செய்து மாநில அதிமுக வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் ேபசுகையில்
எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் அட்டைகள் வழங்கப்பட்டு அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது. அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் அதன்பின் வழிநடத்திய ஜெயலலிதா வழியில் 3ம் தலைமுறையாக எடப்பாடியார் தலைமையேற்று கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி வருவது மட்டுமின்றி இரண்டே கால்கோடி உறுப்பினர்களை உருவாக்கியுள்ளார். தோ்தல் நேரத்தில் நாம் பணியாற்றுவதற்கு வசதியாக பூத்கமிட்டி முறையாக அமைக்க வேண்டும் ஏற்கனவே இளைஞர்கள் இளம் பெண்கள் கட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தான் இளைஞர் பாசறை உருவாக்கப்பட்டது. தலைமை கழககத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 10 சதவீதம் வாக்கு வங்கி நமக்கு குறைந்துள்ளது அதற்கு வலுசோ்க்கும் வகையில் இளைஞர்கள் இளம் பெண்களை கட்சியில் ேசர்ப்பதற்கு அனைவருமே பணியாற்ற வேண்டும் ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே எனது மறைவிற்கு பின்னால் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக கட்சி இருக்கும் அதை யாரும் அழிக்க முடியாது. என்று கூறினார். அதே வழியில் பல துரோகிகள் இருந்து பல சதி செயல்களில் ஈடுபட்ட போதிலும் கட்சியை கட்டுகோப்பாக வழிநடத்தி வருகிறார். எம்.பி தேர்தலில் நாம் படுதோல்வி அடைந்தோம் அது கொஞ்சம் வேதனையான விஷயம் தான் இருந்தாலும் எம்.பி தோ்தலை விட எம்.எல்.ஏ தேர்தல் தான் நமக்கு முக்கியம் என்பதை நினைவில் வைத்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி பலத்தின் மூலம் தான் திமுக பொிய கட்சியாக விளங்குகிறது. ஆனால் அதிமுக தான் மிகப்பொிய கட்சி இதையெல்லாம் உணா்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து தான் எடப்பாடி உள்பட நானும் பல்ேவறு பதவிகளிலிருந்து இன்று எடப்பாடியார் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் இதே போல் உழைக்கின்ற அனைவருக்கும் அதிமுக ஆட்சி அமையும் போது உாிய அங்கீகாரம் வழங்கப்படும். என்று பேசினார்.

பின்னர் வீடு, வீடாக சென்றும் உறுப்பினர் அடையாள உரிமைச் சீட்டுகள் உரியவர்களிடம் சென்று சேர்ந்ததா என்பதை உறுதி செய்ய ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

